கண்னன் முத்தம் வைக்கறான்... சவுந்தர்யாவுக்கு உயிர் வருது...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் சஞ்சீவின் செமயான நடிப்பை காமிக்க ஒரு நல்ல வாய்ப்பாக இந்த எபிசோட் இருந்துச்சு.
சவுந்தர்யாவுக்கு மோட்டார் பம்ப்செட் கரண்ட் மூலமா ஷாக் அடிச்சு தூக்கிப் போட்டுடுது. சவுந்தர்யாவுக்கு மூச்சு பேச்சு இல்லை.
கண்ணனும், முத்துசெல்வியும் ஓடி வர்றாங்க தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கறாங்க. கண்ணன் என்னென்னவோ சொல்லி அழ அதை கேட்கும் முத்துச்செல்வி அதிர்ச்சியாகறா.

நீ இல்லேன்னா
சவுண்டு நீ இல்லேன்னா நானும் செத்துருவேன் சவுண்டு... என் உசுரே நீதான்..என்னை விட்டுட்டு நீ மட்டும் போகலாம்னு பார்க்காத.. உடனே நானும் வந்துருவேன்னு இவன் சொல்ல, இதையும் கேட்டு அதிர்ச்சி ஆகி பார்வையை உருட்டி விழிக்கறா முத்துச்செல்வி. முத்துச்செல்வி ஓவர் நடிப்பு...பார்வையை உருட்டறது பயமா இருக்கு.

சவுந்தர்யா மேல
கண்ணன் சவுந்தர்யாவை தூக்கி மடியில் வச்சுக்கிட்டு தேம்பி தேம்பி அழறான். மனசில் இருந்த அத்தனையும் கொட்டிக்கிட்டே அழ ,முத்துசெல்விக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி. கடைசியா சவுந்தர்யாவின் நெத்தியில் மிக அழுத்தமாக முத்தம் பதிக்கிறான் கண்ணன்.

உயிர் விருட்டென்று
கண்ணன் மாமா தனது நெற்றியில் முத்தமிட்டது தெரிந்தோ என்னவோ, சவுந்தர்யா விருட்டென்று உயிர் எழுகிறாள். சார் நீங்க எல்லாம் வெளியில போங்க... அவங்களுக்கு உணர்ச்சி வந்து இருக்கு. இனிமேல் நாங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கிறோம்னு சொல்றாங்க.

எல்லாரும் வீட்டிலிருந்து
அதற்குள் விஷயம் தெரிஞ்சு எல்லாரும் வந்துடறாங்க. சவுந்தர்யாவுக்கு ஒண்ணுமில்லை... அவர் உயிர் பிழச்சுருவார்னு டாக்டர் சொல்ல, வீட்டில் யாரும் இன்னும் அமைதி அடையலை.

கரணம் இதற்கு
மின்சாரம் ஷாக் அடிச்சதுக்கு காரணம் மாயன்தான்னு கேள்விப்பட்ட கண்ணன், அவனை துரத்தி சென்று ஒரு கையை வெட்டியும் விடறான்..போலீஸ் வந்து கண்ணனின் மாமாவிடம் ஒரு சம்பவமாயிருச்சு சார்...அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்..சும்மா கண்ணன் வந்தால் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்கன்னு சொல்லிட்டு போறாங்க...


Click it and Unblock the Notifications











