For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாவ் பப்லு... சட்டையை கழற்றி .. அம்மாடி.. இப்பவும் செம மாஸ் காட்றாரே!

  |

  சென்னை : இந்த வயசிலேயும் இப்படி பிண்ணுறாரேனு வயசு பொண்ணுங்களையும் வாயடைக்க வைத்து விட்டார் நம்ம பிருத்விராஜ் எனப்படும் பப்லு.

  இளைஞர்களுக்குப் போட்டியாக பார்ட்டியில் பிருத்வி செய்த பர்பாமன்ஸ் தான் வேற லெவல் வைரலாகி வருகிறது.

  பப்லு என்று முன்பு அழைக்கப்பட்ட பிருத்விராஜ் இப்போது டிவி பிரபலம். நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார். வாணி ராணி தொடர்தான் அவருக்கு மிகப் பெரிய பிரேக்காக அமைந்தது.

  க்ளீன் போல்ட்... வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ க்ளீன் போல்ட்... வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ

  செம கட்ஸ்

  செம கட்ஸ்

  இந்த நிலையில் அவர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு சட்டையைக் கழற்றிப் போட்டுள்ள ஆட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வயசுல ஆஃப் செஞ்சுரி அடிச்சிருந்தாலும் யூத்துக்கு டஃப் கொடுக்குற அளவுக்கு பெர்பாமன்ஸ் கொடுத்து பட்டையை கிளப்பி இருக்கிறார். ஏதோ ஒரு பார்ட்டியில் தாடி வைத்த சில யூத்துகள் அவரை கலாய்க்க நினைச்சு சட்டையை கழட்டி ராக்கிங் பண்ண ஜாலியா ட்ரை பண்ணி இருக்காங்க போல,

  ஜெர்க்கான ஜூனியர்

  ஜெர்க்கான ஜூனியர்

  நம்ம ஆளு அடக்கமா சட்டையை கழட்டி இருக்காரு ஆனால் நடந்தது என்னமோ இவருடைய சிக்ஸ்பேக் கையும்,டான்ஸ் ஸ்டெப் பை பார்த்து வசூல் ராஜா படத்துல கமலஹாசனை பார்த்து மிரண்டு நிற்கிற சீனியர் ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நம்ம தாடி வச்ச யூத்தெல்லாம் கொஞ்சம் ஜெர்காகிதான் போயிட்டாங்க. பல படங்கள்ல பல ரோல்ல நடித்திருந்தாலும், நெகட்டிவ் ரோல்களில் நடித்த படங்களே இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.

  சீரியலிலும் மாறாத நடிப்பு

  சீரியலிலும் மாறாத நடிப்பு

  தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்தாலும் ஹீரோ ரேஞ்சுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவருடைய நடிப்பு இன்னைக்கு நேத்தைக்கு இல்லை எப்பவுமே பலரும் பார்த்து ரசித்து இருந்தாலும் படங்கள் போலவே சீரியலிலும் மீராவை வெறுத்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிட்டு தான் இருக்கிறார். எவ்வளவுதான் நல்லவரா இருந்தாலும் இந்த சீரியலில் மட்டும் இவருடைய நெகட்டிவ் கேரக்டர் தான் இவருக்கு பிளஸாக இருக்கு.

  மாறாத அழகு

  மாறாத அழகு


  விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் இவரும் நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவும் முட்டிக் கொண்டது அந்த நிகழ்ச்சியைவே மிகவும் பிரபலமாக்கியது. வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லையே என்ற டயலாக் நம்ம சூப்பர்ஸ்டாருக்கு மேட்ச் ஆகுதோ இல்லையோ நம்ம பப்லுவுக்கு கண்டிப்பா மேட்ச் ஆகும் போல,

  இவருக்கு நிகர் யாருமில்லை

  இவருக்கு நிகர் யாருமில்லை

  கொஞ்ச நாள் முன்னாடியே இந்த வீடியோவை வந்திருந்தா சார்பட்டா பரம்பரை படத்துல நம்ம பப்புவும் ஒரு பாக்ஸரா சம்பவம் பண்ணி இருப்பாரோ என்னவோ. சரத்குமார், ரியாஸ்கான் போன்ற ஒரு சில தமிழ் நடிகர்களே வயசானாலும் சிக்ஸ்பேக் அளவுக்கு உடம்பு மெயின்டன் பண்ணிட்டு இருக்காங்க .அந்த லிஸ்ட்ல நம்ம பிருத்விராஜுவும் சளைத்தவரில்லை என்று காட்டியுள்ளார்.ஆன்ட்டி ஹீரோயின்ஸ் கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருப்பதுபோல் அங்கிள் ஹீரோஸ்க்கு ஏதும் ரசிகர் வட்டம் இருந்தால் நம்ம பிரித்விராஜ் தான் அதில் லீடிங்கில் இருப்பார்.

  English summary
  Actor Prithviraj is a born dancer, he is famous for his disco dance in earlier cinema. His dancing with topless video has gone viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X