கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கன்னித் தீவு...ஜல்சா மன்னர் கொண்டு வரும் ஜலாம்பிக்ஸ்

சென்னை :கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 காமெடி தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட் 2021 அன்று மாலை 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேடிக்கை நிறைந்த கன்னித் தீவு நிகழ்ச்சியில் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நையாண்டி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 தொடர் வார இறுதியில் கிங் ஜல்சாவின் சிரிப்பு கலவரத்தில் பங்கேற்க ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த நிகழ்ச்சியை பல்வேறு நகைச்சுவையான திருப்பங்களுடன் பல கண்கவர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக புகழ்பெற்ற காமெடி நடிகர் ரோபோ சங்கர் வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 8, 2021 அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பான இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார்.இந்த வார நிகழ்ச்சி முன் எப்போதும் பார்த்திராத வகையில் சிரித்து சிரித்து விலா எலும்புகளை நோகச்செய்யும் அளவுக்கு நிறைய அம்சங்கள் நிறைந்து இருந்தது .

சிரிப்பதற்காக மட்டுமே

சிரிப்பதற்காக மட்டுமே

வார இறுதியில், நகைச்சுவை, நையாண்டி, மிமிக்ரி ஆகியவை நிறைந்த நகைச்சுவைத் தொடருக்கு ஜல்சா மன்னர் (ரோபோ சங்கர்), ராஜமாதா (ஷகீலா), பேபி மாதா (மதுமிதா), ராஜகுரு (திண்டுக்கல் சரவணன்) மற்றும் இதேபோல் கன்னி தீவில் உள்ள மற்றவர்கள் செய்யும் முட்டாள்தனமான செயல்களை பார்த்து பலரும் ரசித்தனர் .

கேளிக்கை விளையாட்டுகள்

கேளிக்கை விளையாட்டுகள்

கன்னித் தீவில் உள்ள மக்களுக்காக ஜல்சா மன்னர் ஜலாம்பிக்ஸ் என்னும் விளையாட்டு போட்டியை நடத்தினார் . இதில் தடகளப் போட்டியில் இருந்து கயிறை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுகள் வரை, வரவிருக்கும் நிகழ்ச்சி அற்புதமான விளையாட்டுகளால் நிரம்பி இருந்தது . இது பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைதத்து . இது மட்டுமல்லாமல் மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் அமுதவாணன் ஒரு துள்ளல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

கன்னித் தீவின் இந்த வார நிகழ்ச்சியில் அழகான சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். சிறந்த நடிகை, ஜல்சா மன்னருடன் நகைச்சுவையான உரையாடலில் ஈடுபடுவதையும், தீவின் குடிமக்களுடன் வேடிக்கையாக உரையாடுவதையும் பார்த்து பலரும் ரசித்தனர் .

நான் நிறைய சிரித்தேன்

நான் நிறைய சிரித்தேன்

இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து நான் நிறைய சிரித்தேன். மேலும், மன்னர் ஜல்சாவின் தெய்வீக ஆசீர்வாதங்களைத் தேடுவது வேடிக்கையான அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இது ஒரு தனித்துவமான மற்றும் புதிய கருத்தாக்கத்துடன் கூடிய ஒரு நல்ல நிகழ்ச்சி ஆகும். சிறந்த நகைச்சுவை நிறைந்த இந்த தொடர் முழு குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும் என்று தெரிவித்தார்.

வெரைட்டியாக

வெரைட்டியாக

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்வதன் மூலம் கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்க இன்னும் வெரைட்டியாக நிறைய நிறைய சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கின்றனர் .

டிஆர்பி போட்டியில்

டிஆர்பி போட்டியில்

விதவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து கலந்துகொண்டு டிஆர்பி என்னும் மிகப்பெரிய போட்டியில் மிகவும் கடினமான டஃபான சூழலில் கலர்ஸ் தமிழ் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளையும் புதுப்புது கிரியேடிவான ஐடியாக்களை முன் வைத்து நிகழ்ச்சிகளை கொடுத்த வண்ணம் உள்ளது.

சரியாக பயன்படுத்தி

சரியாக பயன்படுத்தி

பரபரப்பாக சினிமாவில் காமெடி செய்து கொண்டிருக்கும் ரோபோ ஷங்கர் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தன்னால் முடிந்த பல விஷயங்களை காமெடியாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகிறார். கலர்ஸ் தமிழ் கொடுத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மேலும் மெருகூட்டும் விதமாக விதவிதமான விளையாட்டு ரவுண்ட்ஸ் அடிஷனலாக சேர்த்து ஷகிலாவுடன் கலந்து சரவெடியான சிரிப்பலையை நடத்திவருகிறார்.

Recommended Video

Shakeela Biopic என் வாழ்க்கையில நிறைய தப்பு பண்ணியிருக்கேன் | Filmibeat tamil
ரிப்பீட் மோடு

ரிப்பீட் மோடு

நடிகை மதுமிதா இவர்களோடு இணைந்து கவுண்ட்டர் கொடுக்கும் விதத்தில் செம டைமிங்குடன் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்ய படுத்துகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கு பெற்ற இந்த பர்ட்டிகுலர் எபிசோட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்ட இந்த எபிசோட் ரிப்பீட் மோடு தேவை என்று உணர்ந்து இந்த எபிசோடை மீண்டும் பலமுறை ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளார்கள் கலர்ஸ் தமிழ் குழுவினர் .

கலைவாணர் என் எஸ் கே

கலைவாணர் என் எஸ் கே

நிறைய வித்தியாசமான திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பெயர்போன ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது மற்றும் காமெடி நடிகர் நடிகர்களுடன் மிகவும் ஆனந்தமாக சிரித்து மகிழ்ந்தது அனைவரையும் பரவசப்படுத்தியது. பொதுவாகவே டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்கள் சிரிக்க வைப்பது மிகவும் கடினம், அப்படி இருக்க "சிந்திக்க தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமானது சிரிப்பு ஒன்றுதான்" என்று கலைவாணர் என் எஸ் கே சொல்லும் இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைப்பது மட்டும் அல்லாமல் பல விஷயங்களில் சிந்திக்கவும் வைத்து வெற்றி பெற்றுள்ளனர் . இணையதளங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோபோ ஷங்கர் ஷகிலா மதுமிதா போன்ற எல்லோரும் கலந்துகொண்டு செய்த லூட்டியை நெட்டிசன்ஸ் ஷேர் செய்ய துவங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X