Don't Miss!
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்... கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே?
சென்னை : விஜய் டிவியில் நிகழ்ச்சிகள், தொடர்கள் என்று அடுத்தடுத்த ஒளிபரப்புகளால் மக்கள் மிகுந்த உற்சாகமடைந்து வருகின்றனர்.
தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
அடுத்தடுத்த வெற்றிப் படங்களையும் விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பி வருகிறது.
Varisu
Trailer:
பவர்
சீட்ல
இருக்காது
சார்..
வெளியானது
வாரிசு
ட்ரெய்லர்..
ஆட்டநாயகன்
விஜய்!

விஜய் டிவி
விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சிறப்பாக களைகட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகிவரும் பல தொடர்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளது.

விஜய் டிவியில் சூப்பர்ஹிட் படங்கள்
மேலும் இந்த சேனலில் புதிய மற்றும் வெற்றிப் படங்களையும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது. பல வெற்றிப் படங்களை விஜய் டிவி ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து வருகிறது. திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் பார்க்க முடியாத ரசிகர்கள் இதன்மூலம் புதிய படங்களை கண்டுகளிக்க முடிகிறது. இத்தகைய சிறப்பான படங்களின்மூலம் தன்னுடைய டிஆர்பியையும் விஜய் டிவி அதிகரித்து வருகிறது.

விஜய் டிவியில் காந்தாரா
இதனிடையே கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காந்தாரா படத்தை விரைவில் ஒளிபரப்ப உள்ளதாக விஜய் டிவி தற்போது ப்ரமோ வெளியிட்டுள்ளது. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இந்தப் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக அந்த ப்ரமோவில் தெரிவித்துள்ளது.

நில உரிமையை பேசிய காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்தப் படம் ஆண்டாண்டு காலமாக நடக்கும் நில உரிமை பிரச்சினையை இந்தப் படத்தில் எந்தவிதமான பிரச்சாரமும் இல்லாமல் பேசியுள்ளார். சர்வதேச அளவில் இந்தப் படம் மிகச்சிறந்த கவனத்தை பெற்ற நிலையில், ரிஷப் ஷெட்டி மட்டுமில்லாமல் மற்ற கேரக்டர்களும் செதுக்கப்பட்டுள்ளன.

ஓடிடியில் வெளியான காந்தாரா
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என ஹிட்டடித்த காந்தாரா படம் வசூல்மழையும் பொழிந்தது. தொடர்ந்து அமேசான் பிரைமிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டுக்களையும் இந்தப் படம் பெற்றது. பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இந்தப் படத்தை கொண்டாடினர். தமிழில் பொன்னியின் செல்வன் வெளியான நாளன்று இந்தப் படமும் வெளியானது.

கோடிகளை அள்ளிய காந்தாரா
கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்திருந்த ஹம்பாலே நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்திருந்த நிலையில், வெறுமனே 16 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 200க்கும் மேற்பட்ட கோடிகளை வசூலித்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படம் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
-
ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: 400 கோடி செலவில்..? 1000 தியேட்டர்களில்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்
-
அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்!
-
கடவுளுக்கு ஆண்,பெண் எல்லாம் ஒன்று தான்.. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை..ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு!