கர்மா யாரை விட்டுச்சு: பார்வையாளர்களை நம்பி ஏமாந்த பிக் பாஸ்
சென்னை: ப்ரொமோ வீடியோக்கள் மூலம் பார்வையாளர்களை ஏமாற்றிய பிக் பாஸை கர்மா சும்மாவிடவில்லை.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு கஸ்தூரி வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் சீசனில் இருந்து கூறி வந்தனர். ஆனால் நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் என் 2 பிள்ளைகளையும் யார் பார்த்துக் கொள்வது என்று கேட்டார் கஸ்தூரி.
இந்நிலையில் ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளனர்.

கஸ்தூரி
பிக் பாஸ் வீட்டிற்கு 17வது போட்டியாளராக கஸ்தூரி வந்ததை பார்த்த பார்வையாளர்கள் குஷியாகிவிட்டனர். அக்கா, ட்விட்டரிலேயே செம காட்டு காட்டுவாங்க. பிக் பாஸ் வீட்டை சும்மா அதிர வைக்க போறாங்க என்று பார்வையாளர்கள் மகிழ்ந்தார்கள். வார இறுதி நாட்களில் கமல் ஹாஸனுக்கே டஃப் கொடுப்பார் கஸ்தூரி என்று எல்லாம் எதிர்பார்த்தார்கள்.

வனிதா
கஸ்தூரியை அனுப்பிவிட்டு அவர் பின்னாலேயே வனிதா விஜயகுமாரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர். வனிதா வந்த பிறகு கஸ்தூரிக்கு மவுசு இல்லாமல் போய்விட்டது. கஸ்தூரியின் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் வனிதா அக்காவை வைத்து கதையை முடித்துவிட்டாரே பிக் பாஸ். இவர் போடும் கணக்கே புரியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

திட்டு
வனிதாவை வெளியேற்றிய பிறகு அவர் மீது பாச மழை பொழிந்த பார்வையாளர்கள் அவர் மீண்டும் திரும்பி வந்ததை பார்த்து சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். வனிதா என்றால் விஷம், சனியன் என்று திட்டுகிறார்கள். அடப்பாவிகளா, உங்க பேச்சை பார்த்து தானே வனிதாவை அழைத்து வந்தேன் என்று பிக் பாஸ் புலம்பிக் கொண்டிருப்பார். வனிதாவை அழைத்து வாங்க என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பார்வையாளர்கள் பல்ட்டி அடித்துவிட்டனர்.

அதிர்ச்சி
ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் சப்பையாக வேறு ஒன்றை காட்டி ஏமாற்றுவதற்கு பெயர் போனவர் பிக் பாஸ். அவருக்கே பார்வையாளர்கள் விபூதி அடித்துவிட்டனர். வனிதாவை புகழ்ந்த அதே ஆட்கள் தற்போது அவரை பிசாசு, பீடை என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல்ட்டி அடிப்பது எல்லாம் பிக் பாஸுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் நல்லாவே வரும் என்று நிரூபித்துவிட்டார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











