கர்மா இஸ் பூமாராங்.. நீ அபி ஃபீலிங்ஸோட விளையாடின.. இப்போ உன் ஃபீலிங்ஸோட அவ விளையாடுறா.. நடிகை நச்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வாலை நடிகை காஜல் விளாசியிருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் யாரை உண்மையாக காதலிக்கிறார்? யாருடன் கடலை போடுகிறார் என்பது பெரிய பஞ்சாயத்தாகியுள்ளது. தன்னுடனான காதலை முறித்தக்கொண்ட கையோடு கவின் லாஸ்லியாவுடன் சுற்றுவது சாக்ஷிக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.
ஆனால் லாஸ்லியாவுடன் தனக்கு இருப்பது ஃபிரன்ட்ஷிப்தான் என்கிறார் கவின். ஆனால் அவர்கள் பழகுவதை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

சைட் அடிக்கிறேன்
தொட்டு பேசுவது, சிரிப்பது, வெட்கப்படுவது என வேறு மாதிரியாக உள்ளது அவர்களின் பழக்கம். கவினை ஃபிரன்ட் என்று கூறும் லாஸ்லியா அவரை சைட் அடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

துளைக்கும் ஹவுஸ்மேட்ஸ்
கவினும் லாஸ்லியாவும் பழகும் விதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் நட்பாக தெரியவில்லை. ஃபிரன்ட்ஷிப்பில் என்ன மிட் நைட்டில் தனிமையில் பேச வேண்டியிருக்கு என்று துளைத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

லாஸ் விளையாடுகிறாள்
இந்நிலையில் சாக்ஷி குறித்து கருத்து கூறியுள்ளார் சாண்டியின் முன்னாள் மனைவியும் நடிகையுமான காஜல். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவள் தனது நெருங்கிய தோழியான அபியின் ஃபீலிங்ஸ் உடன் விளையாடினாள். இப்போது லாஸ்லியா அவளுடைய ஃபீலிங்ஸ் உடன் விளையாடுகிறாள்.
கர்மா இஸ் பூமராங்
இத்தனைக்கும் லாஸ்லியா அவளின் ஃபிரன்ட் கூட இல்லை. ஸ்வீட் ஹார்ட் கர்மா இஸ் பூமராங். அவள் உண்மையிலேயே காதலித்தாள் என்று சொல்கிறாராயா? சாரி நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவ்வாறு காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அபிதான் முதலில் காதலித்தது
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனேயே கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார் அபிராமி. மேலும் சரவணன் மீனாட்சி சீரியல் வந்த காலத்தில் இருந்தே தனக்கு கவின் மீது க்ரஷ் இருந்ததாக தனது க்ளோஸ் ஃபிரன்ட்டான சாக்ஷியிடம் தான் முதலில் கூறினார். அபிராமி கவினை காதலிப்பது தெரிந்தும் கவினை காதலித்தார் சாக்ஷி.

வெளியில் காதலி
அதை குறிப்பிட்டே கர்மா இஸ் பூமராங் என பதிவிட்டிருக்கிறார் காஜல். ஆனால் பிக்பாஸ் வீட்டில் கவின் யாரையும் இதுவரை உண்மையாக காதலித்ததாக தெரியவில்லை. போதா குறைக்கு அவருக்கு வெளியில் வேறு காதலி இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











