twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg Boss 3 கர்மா இஸ் பூமராங்: சாக்ஷியை விரட்டு விரட்டுன்னு விரட்டுதுல்ல

    By Siva
    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Day 18 : Promo 1: கவினை இனி தன்னிடம் பேசவேண்டாம் என்று சொல்லிய லோஸ்லியா

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பார்த்து பார்வையாளர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் சாக்ஷியுடன் ஒட்டி உறவாடினார். இந்நிலையில் பிக் பாஸ் சொல்லியதை அடுத்து சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டுகிறார்.

    கவின் லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழகுவது சாக்ஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்போ அபிராமியை மறந்துவிட்டீர்களே பிக் பாஸ். அந்தம்மா தான் கவின் மீது காதல் என்று முதல் நாளே சொன்னவர்.

    செம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ! செம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ!

    கவின்

    கவினும், லாஸ்லியாவும் சேர்ந்து சாப்பிட்டதை பார்த்து நீ கோபித்துக் கொண்டு பண்ண பிரச்சனையால் தான் இதெல்லாம் நடந்தது என்று இங்கு விவாதித்தார்கள் என்று வனிதா சாக்ஷியிடம் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்த்த லாஸ்லியா நான் கதைக்க வேண்டும் என்று கூறி கடுப்பாகி வெளியே செல்ல கவின் பின்னாலேயே போகிறார். நீ இனிமேல் என்னோட கதைக்காத என்று கவினிடம் கூறி கண் கலங்குகிறார் லாஸ்லியா.

    பார்வையாளர்கள்

    கவின் நடந்து கொள்ளும் முறை சரியில்லை. நேரத்திற்கு ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி அவரை கழற்றிவிட்டு அடுத்த பெண்ணுடன் பழகுகிறார். கேமராவுக்கு முன்பே இப்படி என்றால் நிஜத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று கூறி நெட்டிசன்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    சாக்ஷி

    சாக்ஷி கவின் தன் ஆள் என்று முடிவு செய்துவிட்டார். எப்பொழுது பார்த்தாலும் கவின், கவின் என்று இருக்கிறார். இதை பார்த்து கடுப்பாகும் பார்வையாளர்கள் சாக்ஷியை இந்த வாரம் வெளியேற்றுமாறு பிக் பாஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வாய்ப்பில்ல ராஜா அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை.

    அபிராமி

    அபிராமி

    அபிராமிக்கு கவினை பிடிக்கும் என்று தெரிந்தும் சாக்ஷி அவருடன் நெருங்கிப் பழகி கடுப்பேற்றினார். இந்நிலையில் கவின் லாஸ்லியாவுடன் சேர்ந்து கொண்டு சாக்ஷியை கடுப்பேற்றுகிறார். கர்மா யாரை சும்மா விட்டது சாக்ஷி. கவினை ஒவ்வொரு பெண்ணுடனும் பழகவிடுகிறார் பிக் பாஸ். அடுத்தது யாரோ?. பிக் பாஸ் செய்யும் இந்த வேலையை பார்த்து திட்டாதவர்களே இல்லை.

    English summary
    Losliya gets upset and emotional in Bigg Boss 3 house after Sakshi creates a scene because of Kavin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X