ரூ.3,500 சம்பளம்.. விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை.. தனியாக ஜெயிக்க போராடும் கார்த்திக் ராஜ்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்திக் ராஜ். இல்லத்தரசிகள் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருக்கும் கார்த்திக் ராஜ் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்ன? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் கார்த்தியின் உண்மையான பெயர் கார்த்திக் ராஜ். இவர் 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்தார். கார்த்திக் ராஜின் தந்தை ஏ.எல்.ஸ்ரீனிவாசனின் தயாரிப்பு மேலாளராகத் திரைப்படத் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். கார்த்திக் இத்துறையில் நுழைவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். சென்னையில் பள்ளி படிப்பை முடித்த கார்த்திக் ராஜ், ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மாதம் 3,500 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு இருக்கும் போது தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற அது இது நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

Karthigai deepam Karthik Raj Salary
Photo Credit:

நடிகர் கார்த்திக் ராஜ்: அந்த நேரத்தில் தான் விஜய் டிவி 'கனா காணும் காலங்கள்' சீரியலுக்கான ஆடிஷனை நடத்தில் உள்ளது. அதில் கலந்து கொண்டு தேர்வான கார்த்திக் ராஜ் அந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். அதைத்தொடர்ந்து, 'ஆபீஸ்' சீரியலில் சுருதி ராஜூக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஜெனிபருடன் இணைந்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அந்த ரியாலிட்டி ஷோவில் இருந்து பாதியில் எலிமினேட்டான கார்த்திக் ராஜ், பட வாய்ப்பை தேடி அலைந்த போது தான், 465 என்கின்ற படத்திலும், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை. முகிலன் என்கிற வெப்தொடரிலும் லீட் ரோலில் நடித்தார். ஆனால், இந்த ரெண்டு படங்களும் கார்த்திக் ராஜூக்கு வரவேற்பு பெற்றுத்தரும் திரைப்படங்களாக அமையாததால், மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் ஆதித்யா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

செம்பருத்தி சீரியல்: அந்த சீரியல் கார்த்திக் ராஜுக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பை கொடுத்தது. இல்லத்தரசிகள் அனைவரும் கொண்டாடும் சீரியலாக செம்பருத்தி சீரியல் இருந்தது. அந்த சீரியலில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த ஜோடிக்கான, விருந்து சிறந்த சீரியலுக்கான விருது, மக்கள் மனம் கவர்ந்த நடிகர் என பல விருதுகளை செம்பருத்தி சீரியல் கார்த்திக்ராஜுக்கு பெற்று கொடுத்தது. செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து சொந்த படம் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு உங்களால் முடிந்த உதவியை கொடுங்க என வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வெளியான பிறகு கார்த்திக் ராஜுக்கு பலரும் உதவிகளை செய்தார்கள். அதன் 'K Studios' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய கார்த்திக் ராஜ், 'பிளாக் 'n' வைட்' படத்தை தயாரித்தார். இந்த படம் நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Karthigai deepam Karthik Raj Salary
Photo Credit:

கார்த்திகை தீபம்: அதன் பின் கார்த்திக் ராஜை சினிமாவில் தான் பார்க்க முடியும் என நாம் நினைத்துக்கொண்டு இருந்த நேரத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்தார். அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதே பெயரில் கார்த்திகை தீபம் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கார்த்திக் ராஜூக்கு ஜோடியாக வைஷ்ணவி சதீஷ் நடித்து வருகிறார். மேலும் ரேஷ்மா பசுபுலெட்டி, கிருத்திகா அண்ணாமலை என பல முன்னணி நடிகர்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

மனைவியை பிரிந்தார்: சீரியலில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகராக இருக்கும் கார்த்திக் ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை கவலை நிறைந்ததாகத்தான் இருக்கிறது. இவர் யாஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளாக இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், கார்த்திக் ராஜ், ஷபானா ஜோடி பரவலாக பேசப்பட்டதால், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திக் ராஜ் யாஷினியை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது, தனியாக வாழ்ந்த வரும் கார்த்திக் ராஜ், சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X