பல பேர் கூட போயிருப்பானு சொல்லுவாங்க.. பணம், புகழுக்காக அதை செய்ய மாட்டேன்.. சீரியல் நடிகை பேட்டி!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஆர்த்திகா, சீரியல், சினிமா எனக்கு பெரிசு இல்லை, இந்த வேலை இல்லை என்றாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போய் பிழைத்துக்கொள்வேன், சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதை முதலிலேயே தெளிவாக சொல்லிவிடுவேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்ததைத் தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை ஆர்த்திகாவிற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

நடிகை அர்த்திகா: விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், TRP லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் தீபா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் அர்த்திகா. மேலும், கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா இருவரின் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகளை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
சீரியல் சினிமா பெரிசு இல்ல: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம் இப்போ தெரியாமல் கேட்டுவிட்டீங்க, இனிமேல் இப்படி என்னிடம் கேட்காதீங்க என்று ஓபனா சொல்லி விடுவேன். ஏன் என்றால் சீரியல்,சினிமா எனக்கு பெரிசு இல்லை,இந்த வேலைஇல்லை என்றாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போய் விடுவேன். சினிமாவில் பெரிய இடத்திற்கு வர எது வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை.

பணம் பெயர் தேவையில்ல: எனக்கு கடவுள் கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நான் மதிக்கிறேன். இந்த வாழ்க்கையில், நான் மகிழ்ச்சியாக இருந்தால், போதும் அதற்கு பணம் தேவையில்லை, பெயர் தேவையில்லை நாம் நம்மலாக இருந்தால் போதும். நடிகர்கள் மட்டும் தான் இந்த உலகத்துல இருக்காங்கலா பலரும் பல வேலைகளை செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் அனைத்து வேலையையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன். சினிமாவில் இருந்தால் மட்டும் தான் என்னால் ஜெயிக்க முடியும் என்பது இல்லை.

முன்னாடியே சொல்லிடுவேன்: சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் அவர்கள் அப்படி செய்வதால், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் என்று நினைத்து கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது. அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லிவிட்டால் போதும், அதே போல, எனக்கு கவர்ச்சியாக உடை அணிய பிடிக்காது, இதனால், நான் முன்பே எல்லாத்தையும் சொல்லிவிடுவேன். அதற்காக பணம் குறைவாக வந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

மோசமான கமெண்ட்: தற்போது பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலர் இன்ஸ்டாகிராமில் மோசமான வீடியோக்களை போடுகிறார்கள். இதைப்பார்த்து பத்து பேர் நல்லா இருக்கு என்று சொல்லி இருந்தாலும், மற்றவர் இந்த பெண்ணு நல்ல பெண்ணே இல்ல, பல பேர் கூட போய் இருப்பா என்று கமெண்ட் செய்வார்கள். இதனால், பிரபலமாவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது என்று அவர் அவர் மனதில் தோன்ற வேண்டும் என்று நடிகை ஆர்த்திகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











