எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயசு.. அது எனக்கு பெருமை தான்.. சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்க

சென்னை: தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகைகளில் நடிகை மீரா கிருஷ்ணன் பலருக்கும் விருப்பமான நடிகைகளில் ஒருவர். அதற்கு காரணம் மிகவும் ஹிட் அடிக்கும் சீரியல்களில் மீரா கிருஷ்ணன் சீரியலின் மிக முக்கியமான மையக் கதாபாத்திரங்களில் ஒருவராக இருப்பார். இப்படி இருக்கும்போது, நடிகை மீரா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கும் நாயகி சீரியலில் தனக்கு மகனாக நடித்த சின்னத்திரை நடிகர் திலீப்புக்கும் ஒரே வயது தான் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், " எனக்கும் நாயகி சீரியலில் எனக்கு மகனாக நடித்த திலீப்பிற்கும் ஒரே வயது தான். திலீப் நேரடியாகச் சென்று இயக்குநர் குமரன் சாரிடம் கேட்டே விட்டார். சார் எப்படி சார் அவருக்கும் எனக்கும் ஒரே வயது, அப்படி இருக்கும் போது நாங்கள் இருவரும் அம்மா - மகனாக நடிக்க முடியும் என்று கேட்டு விட்டார்.

Karthigai Deepam Serial Actress Meera Krishna Recent Interview About Her Age Controversy

வயது: ஆனாலும் நாங்கள் அதில் கதாபாத்திரத்தை புரிந்து ஏற்று நடிக்கத் தொடங்கினோம். நடிப்பு வேறு, தனிப்பட்ட வாழ்க்கை என்பது வேறு. அப்படி இருக்கும்போது, இதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் அப்போதே என்னை பலரும் நான் 50 வயதுக்கு மேல் இருப்பேன் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு அப்போது 30 வயது தான் ஆனது. அதேபோல் இப்போதும் எனக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு இன்னும் 40 வயது கூட ஆகவில்லை. ஆனால் எனது வயது குறித்து மற்றவர்கள் இது போலச் சொல்வதை நான் பாசிட்டிவாகத்தான் ஏற்றுக் கொண்டேன். கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் எடுத்துக் கொண்டேன்" என்று கூறி உள்ளார்.

இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் குறிப்பாக சீரியல் ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது. இவர் சன் டிவி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் என தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

நியூஸ் டூ சீரியல்: மீரா கிருஷ்ணன் அடிப்படையில் செய்தி வாசிப்பாளர், தூர்தர்ஷன் மற்றும் சன் டிவிகளில் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தவர், அதன் பின்னர் சீரியலில் கால் தடம் பதித்தார். சன் டிவியில் நாயகி மற்றும் சித்தி 2 சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து அசத்தினார். இந்த சீரியலில் முதல் சீசனில் இவரது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது மட்டும் இல்லாமல், மிகவும் நேர்த்தியாகவும் அவர் கையாண்டு இருந்தார். சன் குடும்ப விருதுகள், ஜீ குடும்ப விருதுகள், ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகளில் விருதுகள் பெற்று அசத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X