கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. நடிகை சொன்ன தகவல்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில், முக்கியமான ரோலில் நடித்து வந்த நடிகை சுப ரேக்ஷா விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் கார்த்திகை தீபம். இந்த தொடரில் கார்த்திக், தீபாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும், அபிராமியின் உயிரை காப்பாற்ற, தீபா தாலியை கழட்டி வைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டார். தற்போது அபிராமி நல்லபடியாக திரும்பி வந்ததால், மீண்டும் தீபாவிற்கு திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், கார்த்திகை திருமணம் செய்ய ஆசைப்படும் ரம்யா, இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி கார்த்திகை திருமணம் செய்ய திட்டம் போடுகிறாள்.

தாலியை திருடுவது, முகூர்த்தப் புடவையை திருடுவது என பல வேலைகளை செய்த ரம்யா தற்போது, தீபாவை போலவே மாஸ் போட்டுக்கொண்டு, கார்த்திகை திருமணம் செய்ய திட்டம் போட்டு வருகிறாள். மறுபக்கம், ரியா, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா என திருமணத்தை நிறுத்த நான்கு பேரும் சேர்ந்து கொண்டு திட்டம் போடுகின்றனர். இதையெல்லாம் தாண்டி தீபா, கார்த்திக் திருமணம் எப்படி நடிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
விலக காரணம்: இந்த தொடரின் அருணின் மனைவியான ஐஸ்வர்யா இந்த ரோலில் நடித்து வந்த சுப ரேக்ஷா அந்த நடிகை சீரியலில் இருந்து திடீரென விலகியதை அடுத்து, அந்த தொடரில் தற்போது, சாந்தினி கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் நடித்த காட்சிகள் தற்போது, சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதாபாத்திரம் மாற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
காரணம் இதுதான்: தற்போது ஐஸ்வர்யா ரோலில் நடித்த சுப ரேக்ஷா அந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், இந்த சீரியலில் இருந்து நான் ஏன் விலகினேன் என்று பலர் கேட்டு வருகின்றனர். ரசிகர்களாகிய உங்களின் அன்பை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது நான் கன்னட படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதால் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். கூடிய விரைவில் மீண்டும் ஒரு சீரியலில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











