twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெட்டப்பை மாத்தி செட்டப்பை மாத்தி...தமிழா தமிழா!

    |

    சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பது கெட்டப்பில் வந்து இருக்கார் இயக்குநர் கரு.பழனியப்பன். இவர்தான் தமிழா தமிழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருபவர். ஆரம்பத்தில் இருந்து ஒரே கெட்டப்பில் வந்து நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்த இவர், நேற்றைய எபிசோடில் வேறு கெட்டப்பில் வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கார்.

    தலையில் முடியுடன், அழகிய தோற்றத்தில் வந்து இருக்கும், இவரின் சிகை அலங்காரம் பார்க்கக் நன்றாக இருந்தது என்று பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இதற்கு ஏற்றார் போன்ற தலைப்பைக் கொண்ட விவாதத்தில்தான் நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கார்.

    இளமையைத் தக்க வச்சுக்க நீங்கள் மெனக்கெடும் விஷயங்கள் என்னென்ன என்றும், அதை தக்க வச்சுக்க அவரவர் என்ன செய்து வருகிறார்கள் என்பதும்தான். ஆனால், செய்யும் விஷயம் கைக் கொடுத்து இருக்கிறதா என்றும் பேசி இருக்கிறார்கள்.

    நிகழ்ச்சித் தொகுப்பாளர்

    நிகழ்ச்சித் தொகுப்பாளர்

    ஜீ தமிழ் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் கமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் விவாதத்தில் கலந்துக்கொண்டவர்கள் 30 பிளஸ் பற்றி பெருமையாகவும் பேசினார்கள், கொஞ்சம் வயதானவர்கள் என்பது போலவும் பேசி இருந்தார்கள். 30 பிளஸ் பற்றி கமல் பேசினார்.

    என்ன வார்த்தைகள்

    என்ன வார்த்தைகள்

    நீங்கள் இளமையானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றைய இளைஞர்கள் போல என்ன வார்த்தையை பேசுவீர்கள் என்று கரு. பழனியப்பன் கேட்டார். ஹாய் டியூட், ஹாய் பேபி..நண்பா ப்ரோ..மாமு.. என்று பதில் சொன்னார்கள். வாட்ஸாப்பில் மெசேஜ் மூலம் பேசிக்கொண்டு இருக்கும்போது யா என்று சொல்லாமல் முடிக்கும்போது எப் என்று முடிக்கணுமாம். அது சமீபத்தில்தான் எனக்கு தெரிந்தது என்று ஒருத்தர் சொன்னார்.

    நான் இளமையாக உணர

    நான் இளமையாக உணர

    நான் என்னை இளமையானவனாக உணர வைக்க, எனக்கு என் ஒல்லியான உடல் வாகு கைக் கொடுக்கிறது என்று சொன்னார் கமல். மேலும், என் பையனோடு விளையாடுகிறேன்.. அவனுக்கு நிகராக சைக்கிள் ஓட்டுவது. அவனது பொம்மைகளை வாங்கும்போதே நானும் அது போல பொம்மை ஒன்று வாங்கி வைத்துக்கொண்டு அதே விளையாட்டை அவனோடு விளையாடுவது என்று என்னை இளமையாக வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கிறேன் என்று சொன்னார்.

    நாற்பதுகளில் இருப்பவர்

    நாற்பதுகளில் இருப்பவர்

    நாற்பதுகளில் இருப்பவர்கள் உங்களுடன் உரையாடும்போது என்னென்ன வார்த்தைகள் பேசுகிறார்கள் என்று இளம் பெண்களிடம் கேட்டார் கரு. பழனியப்பன். பாப்பா என்று பேச ஆரம்பிப்பார்கள், குட்டிமா என்றும், கன்னுக்குட்டி, டார்லிங் என்றும் கூப்பிட்டு கடைசியில் போன் நம்பர் கேட்பார்கள் என்று சொன்னார் ஒரு இளம்பெண். இப்படியாக நிகழ்ச்சி சுவையாக இருந்தது.

    அங்கிள் பிச்சைக்காரன்

    அங்கிள் பிச்சைக்காரன்

    அங்கே தலைக்கு கலர் பண்ணிக்கிட்டு உட்கார்ந்து இருக்காரே.. அவரை இங்கே ஒரு பொண்ணு அங்கிள்னு கூப்பிட்டுச்சு. அதுக்கு அவர் நீ என்னை பிச்சைக்கரான்னு கூட கூப்பிட்டுக்கோ.. ஆனால், அங்கிள்னு மட்டும் கூப்பிடாதேன்னு சொன்னார் சார் என்று ஒரு இளம்பெண் ஆன் தி ஸ்பாட்டில் போட்டுக்கொடுத்தார்.

    English summary
    Director Karu Palaniappan is presenting atnew getup on Zee Tamil TV's thamizha thamizha. He is the host of the Tamil Nadu program. He had been presenting the show in the samegetup from the very beginning, and yesterday's episode was hosted in a different setting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X