பார்த்த ஞாபகம் இல்லையோ?... குஷ்புவின் பரம ரசிகரான கருணாநிதி!

By Mayura Akilan

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் திமுக தலைவர் கருணாநிதியை பெரிதும் கவர்ந்துள்ளதாம். தினசரி அந்த தொடரைப் பார்க்காமல் இருக்கமாட்டராம் அந்த அளவிற்கு அதில் நடித்துள்ள குஷ்புவின் பரம விசிறியாகவே மாறிவிட்டாராம் கருணாநிதி.

கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிவரும் பார்த்த ஞாபகம் இல்லையோ? தொடர் அமானுஷ்ய நிகழ்வுகளை உள்ளடக்கிய தொடராகும். இந்த தொடர் 150 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

பரபரப்பான திருப்பங்களுடன் செல்லும் இந்தத் தொடரில் வரும் எபிசோடுகளில் இனி புதுப்பொலிவுடன் குஷ்பு தோன்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிவாங்கும் குஷ்பு

பழிவாங்கும் குஷ்பு

இந்த தொடரில் ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் குஷ்புவை, அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால், புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகளாக இல்லாமல், அதற்கு மாறாக அந்த குடும்பத்தை அழிக்க தொடங்குகிறார் குஷ்பு. ஏன் இந்த பழிவாங்கும் செயல்? எதற்காக குஷ்பு அவர்களை அழிக்க நினைக்கிறார்? என்பதே கதை.

வாரம் ஒரு கிளைமேக்ஸ்

வாரம் ஒரு கிளைமேக்ஸ்

சினிமா படங்களை பொருத்தவரையில் ஒரு க்ளைமாக்ஸ்தான் இருக்கும். ஆனால், சீரியலில் வாரம் ஒரு க்ளைமாக்ஸ் வைக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களிடம் அத்தொடர் சென்றடையும் என்கிறார் தொடரை தயாரித்து நடித்துள்ள குஷ்பு. பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலை பொருத்தவரையில் அதிக எபிசோட்கள் ஓட்டுவதை காட்டிலும், விறுவிறுப்பான தொடராக இருக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தி இருக்கிறாராம். மற்ற சீரியலில் உள்ள செண்டிமென்ட் இத்தொடரிலும் இருந்தாலும், மற்ற தொடர்களை காட்டிலும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' வேறுபட்டு இருக்கும்." என்றார்.

புதுப்பொலிவுடன் குஷ்பு

புதுப்பொலிவுடன் குஷ்பு

பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் 150 எபிசோடுகளை தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும் குஷ்புவின் கதாபாத்திரம் மேலும் மெருகேற்றப்பட்டு புதுப்பொலிவுடன் தோன்றவுள்ளார். ஒரே ஒரு போதை ஊசிக்காக தன் சொந்த மனைவி ஓவியாவையே கொலை செய்ய வருகிறான் கார்த்திக். தன்னை கொலை செய்ய வந்தது தன் கணவன்தான் என்று தெரிந்த ஓவியா அதிர்ச்சியடைகிறாள். தன் கணவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை தெரிந்து கொள்கிற அவள், அதனால்தான் தன்னை கொலை செய்ய வந்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்கிறாள்.

எதிரியை வென்றாரா குஷ்பு

எதிரியை வென்றாரா குஷ்பு

தனது எதிரி ரகுநாத்தின் கைப்பாவையாக இயங்கி வருகிறான் என்பதை அறிந்து தன் கணவனை ரகுநாத்திடமிருந்து மீட்க முயற்சிக்கிறாள். ரகுநாத்துடனான அவள் போராட்டம் வென்றதா என்பது தொடரும் விறுவிறு காட்சிகள், என்று பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் ஆர்வம்

கருணாநிதியின் ஆர்வம்

இந்த தொடர் திமுக தலைவர் கருணாநிதி விரும்பிப் பார்க்கும் தொடர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் சிஐடி காலனியில் உள்ள வீட்டில் இரவு பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் ஒளிபரப்பான போது டிவி திடீரென்று ரிப்பேர் ஆகிவிட்டதாம். உடனே அறிவாலயத்தில் இருந்து ஆட்களை வரவழைத்து விளம்பர இடைவேளைக்கும் அதை சரி செய்தனராம். அப்புறம் அந்த எபிசோடினை நிம்மதியாக பார்த்து ரசித்தாராம் கருணாநிதி.

முன்னணி நடிகர்கள் நடிக்கும் தொடர்

முன்னணி நடிகர்கள் நடிக்கும் தொடர்

குஷ்பு இத்தொடருக்கு கதை எழுதி நடிப்பதுடன், தனது 'அவ்னி டெலிமீடியா' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இதில் குஷ்புவுடன் சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா, தனுஷ், விஷேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.'எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்த சத்யா இத்தொடரின் டைட்டில் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். என்.பிரியன் இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X