இது ஆரவார புலி.. அட்டகாச புலி.. இப்போ அடங்கி போன புலி.. புஸ்ஸான கஸ்தூரி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day:48 : Tharshan, Sherin-னை கோர்த்துவிட்ட Kasthuri- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சரவணன் காரணமே சொல்லாமல் வெளியேற்றப்பட்ட நிலையில், இது குறித்து கமல்ஹாசன் விளக்குவார் என சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமே மிச்சம். கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியில் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இதற்கிடையே பாஸ் 3 நிகழ்ச்சியை பற்றியும் ஹவுஸ் மேட்ஸ் பற்றியும் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வந்த கஸ்தூரி,! நான் போக மாட்டேன், போக மாட்டேன் சொல்லிட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்தார். இரண்டு நாட்கள் பரபரப்பாக பேசப்பட்ட கஸ்தூரி சாண்டியின் கலாயில் சிக்கி புஸ்ஸாகி விட்டார்.

 kasthuri becomes calm in bigg boss

அவரே கமலிடம் இவர்களை பற்றி ஏதேதோ நினைத்து வந்தேன். ஆனால் நிஜத்தில் வேறு மாறி உள்ளார்கள் என்று அனைவருக்கும் செல்லப் பெயர் வைத்தார். லூஸுப் பொண்ணு 1, 2, தலைவி (அபிராமி, சாக்‌ஷி, ஷெரின்), மொக்க ஜோக் முகேன், தமிழ் பொண்ணு மது, கேரன் என்றும் ஷேரன் என்று கமலும் நிக் நேம் வைத்தனர்.

வெள்ளிக் கிழமை கிளிப்பில் கஸ்தூரி நடுவராகவும் ஹவுஸ் மேட்ஸ் அவரவர் ஜோடியோடு(!) நடத்திய ராம்ப் வாக்(?) தர்ஷன்-ஷெரின், லாஸ்லியா-கவின், சாக்‌ஷி-சாண்டி, மது-சேரன், அபி-முகேன் என்று வந்தனர். இதில் சாக்‌ஷியும் தர்ஷனும் தனித் தனியாக வென்றனர்.

ஏஞ்சல் யார் டெவில் யார் என்று தேர்வு செய்ய சொன்னபோது 3 பேர் ஷெரினை தேர்வு செய்தனர். கமல் தர்ஷன் மற்றும் முகேன் மீது காட்டும் அதீத அக்கறை அபிராமிக்கு அட்வைஸ் செய்யும் போதும் மாலையை ஷெரின் கையில் கொடுத்தால் போதும் என்று தர்ஷனிடம் கூறிய போதும் தெரிந்தது. சாக்‌ஷிக்கும் ஷெரினுக்கும் சண்டை மூண்டு விட்டது.

நிகழ்ச்சி தொடங்கிய போது ஓவர் ஆட்டிடூட் காட்டிய அபி தற்போது அடங்கி விட்டார். அப்பா பாசம் கிடைக்காத்தால் இப்படி காதலிலாவது கிடைக்குமா என்று ஏங்குகிறாரோ என நினைக்க வைத்தது. ஆடியன்ஸ் கைதட்டல்கள் நிஜம் தானா என்று யோசிக்க வைக்கிறது. சாண்டி என்ன பாடல் 3 பேருக்கும் எழுதி வைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X