பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போகிறேன்.. ஆனால்.. ஒரே டிவிட்டில் வனிதாவை அசிங்கப்படுத்திய கஸ்தூரி!
Recommended Video
சென்னை: நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று மீண்டும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்துகொண்டார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது முதலே வில்லுப்பாட்டு, ஜோசியம் என அசத்தினார்.
ஆனால் இரண்டாவது வாரத்திலேயே நாமினேஷனில் இடம் பிடித்த கஸ்தூரி முதல் முறையிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து விஜய் டிவி ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டில் பேசிய கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டார்.

பினாலே
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100வது நாளை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இதன் பினாலே நிகழ்ச்சி நடைபெரும் என தெரிகிறது.

நேற்று நான்கு பேர்
இதனை முன்னிட்டு இந்த சீசனில் பங்கேற்று வெளியேறிய பழைய போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது காண்பிக்கப்பட்டது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லப்போகிறேன். லவ்லி டைம்ஸ்.
நல்ல வாய்ப்பு
நான் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கப்போகிறேன், அவர்களுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். நல்ல வாய்ப்பு, ஏனெனில் நான் செல்லும் முன்பு அவர்கள் போய்விட்டார்கள்.
பொறுமை காப்பேன்
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். சாரி நோ கன்டென்ட்!!! என தெரிவித்துள்ளார்.

பிளாக் செய்த வனிதா
ஏற்கனவே வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் டிவிட்டரில் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கஸ்தூரியை பிளாக் செய்தார் வனிதா. இந்நிலையில் வனிதாவும் கஸ்தூரியும் பிக்பாஸ் வீட்டிற்குள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். இதனை மனதில் வைத்தே கஸ்தூரி இப்படி டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











