என்ன கஸ்தூரி அக்கா, நீங்க போய் 'அந்த' வார்த்தையை சொல்லலாமா?
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் என்ன கஸ்தூரி அக்கா, இப்படி சாச்சுப்புட்டீங்களே என்கிறார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு நடிகை கஸ்தூரி செல்ல வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பமாக இருந்தது. வழக்கமாக பார்வையாளர்களின் விருப்பத்தை குப்பையில் தூக்கிப் போடும் பிக் பாஸ் கஸ்தூரி விஷயத்தில் ஏதோ வித்தியாசமாக செய்துவிட்டார்.
கஸ்தூரியை பிக் பாஸ் வீட்டிற்குள் பார்த்த பார்வையாளர்கள் இருக்கு இனி என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.
கஸ்தூரி
கன்ஃபெஷன் அறையில் என்ன நடக்கிறது என்பதே இங்கு உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்று கஸ்தூரி கமல் ஹாஸனிடம் தெரிவிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் தங்கமான நல்லவங்க தான் என்று கஸ்தூரி கூறியதை பார்த்து பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தங்கமானவர்கள்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்கமானவர்கள் என்று விபரம் தெரியாதவர்கள் கூறினால் பரவாயில்லை. இத்தனை நாட்களாக வெளியே இருந்து நடப்பது அனைத்தையும் பார்த்த பிறகும் கஸ்தூரி அக்கா எப்படி அப்படி சொல்லலாம், நாங்கள் எதிர்பார்ப்பது வேறு, நடப்பு வேறாக உள்ளதே என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பார்வையாளர்
ஃப்ரூட்டி காலர் ஒருவர் மதுமிதாவை பார்த்து, நீங்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் தைரியமாகவும், கரெக்டாகவும் பேசினீர்கள், தற்போது நடிப்பது போன்று உள்ளது, அது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வி கேட்ட பெண்ணை மதுமிதா ஆர்மி எப்படி எல்லாம் திட்டித் தீர்க்கப் போகிறதோ என்று நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டுள்ளனர்.

சாக்ஷி
சாக்ஷியை பிடிக்கும் என்று கஸ்தூரி தெரிவித்தபோது தான் பிக் பாஸ் பார்வையாளர்கள் தலையில் முதல் இடி இறங்கியது. சாக்ஷியை அனைவரும் சிநேக்சி என்று திட்டுவது தெரிந்தும் கஸ்தூரி இப்படி செய்துவிட்டாரே என்று விமர்சனம் எழுந்தது. தர்ஷனை பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என்கிற உண்மையை தெரிவித்த கஸ்தூரிக்கு தர்ஷன் ஆர்மி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











