வனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 58 : வனிதாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சைக்கிள் கேப்பில் கஸ்தூரி வனிதாவை வாத்து மடச்சி என்று போட்டுத்தாக்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று தொடங்கியது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சேரன் பள்ளிக்கூட தலைமையாசிரியராகவும், கஸ்தூரி டீச்சராகவும் மற்றவர்கள் ஸ்டுடென்ட்ஸாகவும் இருக்க டாஸ்க் கொடுக்கப்பட்டது. நேற்றைய முதல் நாள் டாஸ்க்கில் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் பற்றிக்கொண்டது.

காத்திருக்கும் வனிதா

காத்திருக்கும் வனிதா

ஏற்கனவே கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. எப்போது சான்ஸ் கிடைக்கும் அவரை வச்சு செய்யலாம் என காத்திருக்கின்றனர் கவின் கேங்கும் வனிதாவும்.

வாத்து வனிதா

வாத்து வனிதா

வனிதா இங்கு பேசுவதை அங்கும், அங்கு பேசுவதை இங்கும் போட்டுக்கொடுத்து சண்டை மூட்டி விட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் டீச்சரான கஸ்தூரி, வாத்து பாடலை மாணவி வனிதா பாட வேண்டும் என்றார்.

ஸ்ட்ரைக் நடத்தலாம்

ஸ்ட்ரைக் நடத்தலாம்

அப்போது இருமுறை அவர் வாத்து என்று கூறியதால் வனிதா தன்னை டீச்சர் வாத்து என்று சொன்னதாக கூறி ஆவேசமானார். டீச்சர் எப்படி மாணவியை வாத்து என்று கூறலாம் என ஸ்ட்ரைக் நடத்தலாம் வாங்க என்று மற்றவர்களையும் கூப்பிட்டார்.

மன்னிப்பு கேட்கனும்

மன்னிப்பு கேட்கனும்

ஆனால் வனிதாவுடன் போராட்டம் நடத்த யாரும் முன்வரவில்லை. பின்னர் ஹெட் மாஸ்டரான சேரனிடம் கம்ப்ளையன்ட் செய்த வனிதா, டீச்சர் தவறான முன்னுதாரணம், அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.

வாத்து மடையன்

வாத்து மடையன்

இதைத்தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி. பின்னர் இதே பிரச்சனையை நோண்டிய வனிதா, டாஸ்க்குக்கு வெளியே வாத்து மடையன் என்று கூட கூறலாம், அப்படி சொல்லியிருந்தால் நான் அதற்கு சரியான பதில் கொடுத்திருப்பேன் என்றார்.

அப்படியோ கூறினேன்?

அப்படியோ கூறினேன்?

உடனே பொட்டில் அடித்தாற்போல் ‘வாத்து மடச்சி வனிதா‘ என்றா நான் கூறினேன் என அதிரடியாக கேட்டார் கஸ்தூரி. இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார் வனிதா. மீண்டும் பேச்சை தொடங்கிய கஸ்தூரி, வாத்து என்று உங்களை குறிப்பிட்டு நான் கூறவில்லை, அதற்காக உங்கள் மனம் புண்பட்டிருந்தால் சாரி என்றபடி இடத்தை காலி செய்தார்.

மீண்டும் சண்டை

மீண்டும் சண்டை

எப்படியோ அப்படியா கூறினேன் என்று கேட்டப்படியே கஸ்தூரி சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டார் என வனிதாவின் அராஜகத்தை ரசிக்காத பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். ஆனால் அதை மனதிலேயே வைத்திருந்த வனிதா, மீண்டும் கஸ்தூரியிடம் சண்டை போடும் நோக்கத்திலேயே பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X