சேரன் வெளியேற்றம்.. கோபத்தில் பிக்பாஸை 'எச்சே' என திட்டிய பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி மறைமுகமாக திட்டி டிவிட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் நடிகை கஸ்தூரி. எப்போதும் சமூக பிரச்சனைகள் குறித்து டிவிட்டரில் சாட்டையை சுழற்றும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
மாறாக கவினால் கேவலமாக பேசப்பட்டு கேலி கிண்டலுக்கு ஆளானார் கஸ்தூரி. அவருடைய ஒரிஜினாலிட்டி தெரிவதற்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ்க்கு கும்பிடு
இரண்டு வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த கஸ்தூரி எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். சீக்ரெட் ரூமுக்கு செல்ல விரும்புகிறீர்களா என்று கொடுக்கப்பட்ட ஆப்ஷனையும் உதறிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றார்.

வின்னர் சேரன்தான்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பேட்டியளித்த அவர், நிகழ்ச்சி நேர்மையாக நடந்தால் வின்னர் சேரன் தான் என்றார். மேலும் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் உண்மை முகம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் மற்றவர்களின் உண்மை முகம் தெரியும் என்றார்கள். ஆனால் எனக்கு இப்போதுதான் நிகழ்ச்சியின் உண்மை முகம் தெரிகிறது என்று பிக்பாஸை கடுமையாக சாடினார்.

வெளியேற்றப்பட்ட சேரன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகும் தகுதி சேரனுக்குதான் உள்ளது என்று அடித்து சொன்னார் கஸ்தூரி. ஆனால் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சேரன்.
எச்ச பிக்பாஸ்
இதனால் ஒட்டு மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சேரன் வெளியேற்றம் குறித்து நடிகை கஸ்தூரியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிக்பாஸ் ஒரு மோசடி நிகழ்ச்சி என்றும் எச்ச என்றும் டிவிட்டியுள்ளார். மேலும் நோ ஹேஷ்டேக் என்று பதிவிட்டுள்ள அவர், பிக்பாஸின் சிம்பளான கண்ணை மட்டும் போட்டுள்ளார்.
முட்டான்னு நினைக்கிறாங்க
இதனை பார்த்த ரசிகர்கள், ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என டிவிட்டி வருகின்றனர். இதுவரை ஒளிபரப்பான சீசன்களிலேயே மிகவும் மோசமான சீசன் இதுதான், இதுல ரொம்ப ஃபேமஸாம், ஒரு நியாம் வேணாம்.. கமலும் விஜய் டிவியும் மக்களை முட்டாள்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











