Malar Serial: லவ்வுன்னா லவ்வு அவ்ளோ லவ்வு.. பாவம் மனசு இப்போ வலிக்குது!

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் வித்தியாசமான கதை. மலரை பார்க்க வந்த மாப்பிள்ளை அசிஸ்டெண்ட் கமிஷனர். மாப்பிள்ளையின் அப்பாவோ ராணுவ அதிகாரி.

இது மட்டுமா, பார்க்க வந்த பொண்ணு மலரோ தற்காப்புக்காக ஒரு வாலிபனை கொலை செய்துட்டாதா எப்போதும் நினைச்சுகிட்டு இருக்கா. இந்த விஷயம் இவளின் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும்.

அப்பா பழக்கடை வச்சு நடத்தும் கோயம்பேடு பழ வியாபாரி. அசிஸ்டென்ட் கமிஷனர் கதிரேசனுக்கு பழக்கடை வியாபாரியின் பெண் மலரை பார்த்த உடனே ரொம்ப பிடிச்சுருது.

அவ்வளவு லவ்வு

அவ்வளவு லவ்வு

கதிருக்கு தனக்குப் பெண் பார்த்த மலர் மீது கொள்ளைப் பிரியம் வந்துருது. ஆனால், மலருக்கு உள்ளுக்குள் கதிர் மேல் ஆசை இருந்தாலும், தற்காப்புக்கு ஒரு கொலை செய்துட்டு, அசிஸ்டென்ட் கமிஷனர் வீட்டில் எப்படி நிம்மதியா வாழ முடியும்னு ஒரே குழப்பம்..அதனால் இந்த கல்யானத்தில் பட்டும் படாமலிருக்கா.அப்படி இருந்தாலும் விடுபவனாக இல்லை கதிர். ரொம்பவும் ஆத்மார்த்தமாக மலரை பிடிச்சு லவ் பண்றான்

பொண்ணு பூஜா

பொண்ணு பூஜா

கதிருக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவங்க பொண்ணு பூஜாவுக்கு மாமா கதிரின் மேல் ஆசை.இருந்தாலும் கதிருக்கு அவள் மேல் எதுவும் இல்லை. கதிரின் அக்கா, ஜாதகம் ,பிரசன்னம் இதெல்லாம் பார்க்கறவங்க. அதனால் மகளிடம், பூஜா அமைதியா இரு. கதிருக்கு முதல் கல்யாணம் நிலைக்காது.ரெண்டாவது கல்யாணம்தான் நடக்கும். இதை விட்டுட்டு, அடுத்து நாம் பார்த்துக்கலாம்னு சொல்றாங்க.

இப்போது பொறுமை

இப்போது பொறுமை

அப்போது சரி என்று ஒப்புக்கொண்டு அம்மாவின் பேச்சை கேட்ட பூஜாவுக்கு,கல்யாண நாள் நெருங்கி மலரும் கதிரும் நெருக்கமாக பழகும் சமயமும் வந்துவிட்டதால் பொருத்துக்க முடியலை. அம்மா உன் ஜாதகம் பிரசன்னம் எல்லாம் குப்பையில போடு.என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு திட்டம் போடறா.

போன் செய்து

போன் செய்து

தான் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிட்டு, அந்த ஆஸ்பத்திரிக்கு மலரின் அப்பாவை வர சொல்றா.. டாக்டர் மலரின் அப்பாவை உள்ளே கூப்பிட, உங்கப் பொண்ணுதானா பூஜா.அவதான் உங்களை அப்பான்னு சொன்னா. உங்கப் பொண்ணு பூஜா இப்போ மூணு மாசம்.ரெண்டாவது குழந்தையாமே.. பெத்துக்கோன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. யோசிச்சுட்டு வாங்கன்னு சொல்றாங்க டாக்டர். இதெல்லாம் பூஜாவோட செட்டப்.

பாவம் அப்பா

பாவம் அப்பா

பாவம் மலரின் அப்பா...அவருக்கு தலை சுத்துது.என்னம்மா இதெல்லாம்னு கேட்டுட்டு நிற்க, நீங்க மாத்திரை வாங்கிட்டு வாங்கப்பா... உங்க போனை கொஞ்சம் குடுங்க...ஒரு போன் பண்ணனும்னு சொல்லி நடிக்கறா.போனில் கதிர்தான் தன்னுடன் உறவு கொண்டு இந்த பிள்ளைக்குத் தகப்பன் ஆனவன் போல பேசறா.இதைக் கேட்டு மலரின் அப்பா ஆடிப் போயிடறார். கல்யாணத்தை நிறுத்திடலாம்னு முடிவு செய்யறார்.

மலருடன் பேசியதை

மலருடன் பேசியதை

இரவில் மலரை பார்க்காமல் இருக்க முடியலைன்னு அவ வீட்டுக்கே வந்துடறேன். மலருக்கும் அதிர்ச்சி, தங்கை சுவாதிக்கும் அதிர்ச்சி.அப்பாவுக்கு நடுங்கிப் போயி அவங்க ரெண்டு பேரும் இருக்க ஒரு நிமிஷம் வெளியில வா மலர் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு கூப்பிடறான்.சுவாதி என்ன மாமா இது...அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும்னு பயப்படறா.

நில்லு பார்க்கறேன்

நில்லு பார்க்கறேன்

மலர் பயப்படாதே...தொடக் கூட மாட்டேன்... ஜஸ்ட் பார்த்துட்டு போயிடுறேன்.என்னால் முடியலை மலர். மனசெல்ல்லாம் வலிக்குது.என் மனசு உன்னையே சுத்தி வருது... என்னால கட்டுப் படுத்த முடியாமத்தான் வந்துட்டேன்னு சொல்றான். அப்பா ஒண்ணும் சொல்லாமலே மனசுக்குள்ள உடைஞ்சு போயிருக்கார். அவரை ஒரு பொண்ணா நான் புரிஞ்சுக்க வேணாமான்னு கேட்கறா மலர்.

கண்டு பிடிப்பேன்

கண்டு பிடிப்பேன்

நான் போலீஸ் மலர், எதனால யார் உங்க அப்பா மனசை மத்தினாங்கன்னு கண்டு பிடிப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அப்பா வந்து மலரை அழைச்சுட்டு போக, சுவாதி வந்து மாமா கொஞ்ச நாளைக்கு இங்க வர வேணாம்.பிரச்சனை எல்லாம் முடியட்டும் மாமா அப்புறமா வாங்கன்னு சொன்ன உடனே கண் கலங்கி யார் என்ன செய்தாங்கன்னு கண்டுபிடிக்காம விட மாட்டேன். கிட்டத்தட்ட குற்றவாளியை நெருங்கிட்டேன்னு சொல்றான் அக்கா மகள் பூஜாவிடம்.

பூஜா பயந்து நிக்கறா...பின்னே யாருகிட்ட போலீஸ் கமிஷனர் கிட்டயேவா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X