Bigg Boss 3: கட்டிப்பிடி கட்டிப்பிடிடா.. எல்லாரும் கேட்கறாங்களே.. கமல் முகம் சிவந்து போச்சே!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பிக்பாஸ் தொகுப்பாளரான உலக நாயகன் கமல்ஹாசன்.
வழக்கம் போல இரண்டு சீசன்களில் முதலில் கமல் வீட்டை சுத்தி காண்பிப்பார். அப்புறம், நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள் டான்ஸ் ஆடுவார்கள்.
இது மாதிரி பார்வையாளர்களை நோகடிக்காமல் உடனே அடுத்தடுத்துக்கு 15 போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் கம்பீரம் வழக்கம் போல இல்லாமல் இன்னும் கொஞ்சம் கூடித்தான் போயிருக்கிறது. இன்னும் இன்னுமென்று ரௌத்திரம் பழகிக் கொண்டு இருக்கும் அவரை போட்டியாளர்கள் கட்டிப் பிடிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அட வைத்தியம் தானுங்களே...

இலங்கை லொஸ்லியா
இதில் முதல் போட்டியாளராக களம் இறங்கியவர், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு.பாண்டிச்சேரியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இவருக்கு போட்டியாக இலங்கையின் கிளிநொச்சியில் லொஸ்லியா.இலங்கை தொலைகாட்சி ஒண்றில்செய்தி வாசிப்பாளர்.

நடிகை சாக்க்ஷி
மூன்றாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால் உத்திரகாண்டின் பிறந்த இவர், . சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இளங்கலை தொழில் நுட்பமும், பெங்களூரில் எம்.பி.ஏ மற்றும் லாஸ் ஏஞ்ஜல்ஸில் புரபஷனல் ஆக்டிங் கோர்ஸையும் முடித்திருக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம் ஆகியவைகள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மதுமிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது போட்டியாளர் காமெடி நடிகை மதுமிதா. உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘ஓகே ஓகே' படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது மற்றும் முதல் ஆண் போட்டியாளர் கவின். திருச்சியில் பிறந்த இவர், விஜய் தொலைக்காட்சியின் 'கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர்.

நடிகர் சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது போட்டியாளர் அபிராமி வெங்கடாச்சலம் சென்னையைச் சேர்ந்த மாடலான இவர் 2017-ல் ‘களவு' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது அஜித் நடித்திருக்கும் ‘நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ளார்.
மூன்றாவது சீசனான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7-வதாக களமிறங்கியவர் ‘பருத்தி வீரன்' சரவணன்.1992-ல் ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், கார்த்தியுடன் இவர் நடித்த ‘பருத்தி வீரன்' படம் சரவணனுக்கு ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது.

இயக்குநர் சேரன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது போட்டியாளர் வனிதா விஜயக்குமார்.நடிகர் விஜயக்குமார் - மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான இவர் விஜய் நடித்த ‘சந்திரலேகா' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 'மாணிக்கம்' உட்பட சில படங்களில் நடித்த இவர், அப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மூலம் மக்களிடம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது போட்டியாளர் இயக்குநர் சேரன்.மதுரையில் பிறந்த இவர், ‘பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல குடும்பப் படங்களை இயக்கியர் இவர்.

மோகன் வைத்யா
இந்நிகழ்ச்சியின் 10-வது போட்டியாளர் நடிகை ஷெரின் பெங்களூரில் பிறந்த இவர், தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விசில், பீமா, நண்பேண்டா உட்பட சில கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11-வது போட்டியாளர் மோகன் வைத்யா.கடந்த முறை ஆனந்த் வைத்தியநாதனைப் போல் இந்த முறை இசைத்த துறையை சேர்ந்த மோகன் வைத்யா களம் இறங்கியிருக்கிறார்.

இலங்கை பாடகர் தர்ஷன்
இந்நிகழ்ச்சியில் 12-வதாக களம் இறங்கியவர் நடன இயக்குநர் சாண்டி. கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாடா' நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, பின்னர் சினிமா உலகிலும் பிரபலமானார். குறிப்பாக ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது போட்டியாளர் தர்ஷன்.இலங்கையைச் சேர்ந்த இவர், பல முண்ணனி தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ளார். 2018-ல் வெளியான ‘வேறென்ன வேண்டும்' என்ற படத்தின 15. ரேஷ்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது மற்றும் இறுதி போட்டியாளர் ரேஷ்மா.தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் நடிகையும் கூட.


Click it and Unblock the Notifications











