ரூ.7 கோடி ஜாக்பாட் பரிசு தரும் 'கோன் பனேகா குரோர்பதி- சீசன் 7'
மும்பை: கோன்பனேகா குரோர்பதி சீசன் 7 இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் பரிசுத் தொகையாக 7 கோடி ரூபாய் அறிவித்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கு நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது.
இது வரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதில் ஒரு சீசனை ஷாரூக்கான் தொகுத்து வழங்கினார். ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்போது 7 கோடி ரூபாய் பரிசாக உயர்ந்துள்ளது.

யார் கோடீஸ்வரன்
15 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்பவர்களுக்கு கோன் பனேகா குரோர்பதி சீசன் 7ல் 7 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

கடைசி 4 கேள்விகள்
இந்த நிகழ்ச்சியில் கடைசி 4 கேள்விகள்தான் கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பை தீர்மானிக்கிறது ரூ.1 கோடி, ரூ.3 கோடி, ரூ.5 கோடி, ரூ. 7 கோடி என்ற வரிசையில் கடைசி 4 கேள்விகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

சின்னச் சின்ன மாற்றங்கள்
இந்த சீசனில் ஹாட்சீட்டில் அமரும் நபர் தொடங்கி போட்டி விதிமுறையிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் 6 முதல்
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 6 முதல் சோனி எண்டர்டெயின்மென்ட் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. புத்தம் புது பொலிவூட்டும் வகையில் நிகழ்ச்சியில் அரங்கமும் மாற்றப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











