ஜெயா டிவிக்கு வரும் ‘அக்கா’ கவுசல்யா

By Mayura Akilan

நடிகை கவுசல்யா மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். இந்த முறை ஜெயா டிவியில் அக்கா சீரியல் மூலம் இல்லத்தரசிகளை சந்திக்க வருகிறார்.

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் மூலம் அறிமுகமான கவுசல்யா, தமிழ், கன்னடம், மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு குறையவே, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்தார். திடீரென்று சன் டிவியின் மனைவி சீரியலில் 450 எபிசோடுகள் வரை நடித்தார். அப்புறம் அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டார்.

நித்யானந்தா பக்தை

நித்யானந்தா பக்தை

எப்போவாவது படங்களில் தலை காட்டும் கவுசல்யா, திடீரென நித்யானந்தாவின் பக்தையாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

பூஜை படத்தில்

பூஜை படத்தில்

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் டிவி சீரியல்

மீண்டும் டிவி சீரியல்

பட வாய்ப்புகள் மட்டுமல்லாது சீரியல் வாய்ப்பும் தற்போது கதவைத் தட்டியுள்ளது கவுசல்யாவிற்கு. அக்கா சீரியல் மூலம் மீண்டும் டிவிக்கு வருகிறார்.

மனைவி டூ அக்கா

மனைவி டூ அக்கா

முதலில் சன் டிவியில் மனைவியாக வந்த கவுசல்யா, இப்போது அக்காவாக ஜெயா டிவியில் வருகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை முதல் அக்கா சீரியல் விரைவில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X