For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைதியை பின்னுக்கு தள்ளிய கவிலியா காதல்.. பிக் பாஸ் முடிந்தும் கெத்து காட்டும் கவின் - லாஸ்லியா!

|
Bigg Boss 3 Tamil : We Are the boy-uh Gang Special Performance

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா ஹேஷ்டேக் மீண்டும் டிரெண்டிங்கானது.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த பிக் பாஸ் சீசன் தான் காதல் காவியமாய் உள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 ஆரம்பித்த நாளில் இருந்தே லவ் கேமை தான் கண்டெண்ட் ஆக்கினார்கள்.

முதலில் அபிராமிக்கு கவின் மீது கிரஷ் இருந்தது. பிறகு சாக்ஷியும் கவினும் காதலர்களை போல் சுற்றித் திரிந்தனர். அவர்களுக்கு இடையே லாஸ்லியா வந்ததால், இந்த காதல் முக்கோண காதலாக மாறியது.

உள்ளாடை அணியாமல் படுமோசமான டிரெஸ்.. தொடைக்கு மேல் வரை ஓபன்.. கண்கள் கூசும் மீரா மிதுனின் கவர்ச்சி!

கவிலியா காதல்

கவிலியா காதல்

மற்றொரு பக்கம், அபிராமி - முகென், தர்ஷன் - ஷெரின் இடையே ரொமான்ஸ் காட்சிகள் அரங்கேறின. ஆனால் இதை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது கவிலியா காதல்.

காதல் கவிதை

காதல் கவிதை

கமல், பிக் பாஸ், லாஸ்லியா அப்பா, சக போட்டியாளர்கள் என யார் திட்டினாலும் கவிலியா காதல் கதை ஒருபக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ரசிகர்களுக்கும் அதுவே பிடித்தமானதாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கூட கவினும், லாஸ்லியா ஜாடமாடையாக காதல் கவிதை பாடினர்.

டிரெண்டிங்கான கவிலியா

டிரெண்டிங்கான கவிலியா

பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, கவிலியா ஹேஷ்டேக் டிவிட்டரில் அவ்வப்போது டிரெண்டிங்காகும். கவின், லாஸ்லியா ரசிகர்களும், எதிர்பாளர்களும் இதில் மோதிக்கொள்வர். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி இருக்கிறது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைதியை முந்தியது

கைதியை முந்தியது

கார்த்தி நடித்த கைதி படத்தின் ஹேஷ்டேக் தான் நேற்று டிவிட்டரில் முதலில் டிரெண்டிங்கில் இருந்தது. திடீரென கவிலியா ஹேஷ்டேக் பரபரவென டிரெண்டிங்காகி கைதியை முந்தி சென்றது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் வியப்படைந்தனர்.

ரசிகர்கள் உருக்கம்

"நாம் கவிலியா காதலை கொண்டாடுகிறோம் என்பதை கவினும், லாஸ்லியாவும் நிச்சயம் அறிவார்கள். நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு, நிச்சயம் அவர்களுக்கு யார் மூலமாவது தெரியவரும். இதை எல்லாம் பார்த்து அவர்கள் புன்னகைப்பார்கள். அவர்களுக்குள்ளான அன்பும், பிணைப்பும் சுத்தமானதும், ஸ்பெஷலானதும் கூட. நிறைய பேருக்கு இது புரியாது. இது உண்மை என அவர்களுக்கு தெரியும்", என உருகியுள்ளார் இவர்.

 திட்டவும் தவறவில்லை

திட்டவும் தவறவில்லை

இதேபோல் பலரும் கவிலியா ஹேஷ்டேகில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பாதிக்கு பாதி கவினையும், லாஸ்லியாவையும் திட்டவும் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ தான் என்றாலும், அது தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் ஒரு நிகழ்ச்சி மட்டுமே என்பதை ரசிகர்கள் பல நேரம் மறந்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
#KaviLiya hastag was trending in twitter yesterday even after the show got over on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more