அவ்வளோ நல்லவரா நீங்க? மக்களை எவ்வளவு முட்டாளாக நினைத்திருந்தால் இப்படி சொல்லியிருப்பீங்க கவின்?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 36 : Promo 2 : Sakshi BackStabs kavin : சாக்ஷியின் நம்பிக்கை துரோகம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் தன்னை நல்லவரை போல காட்டிக்கொள்ள நடிப்பது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி புராடக்ட்டான கவின் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் வேட்டையனாக அறியப்பட்டார். இந்த சீரியலின் மூலம் மக்களிடம் ஓரளவுக்கு நல்ல மதிப்பை பெற்றார் கவின்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் காஞ்சமாடு கம்பங்கொல்லையை பார்த்தது போல் அங்கிருந்த பெண்களிடம் வழிந்து வழிந்து கடலை போட்டார். யாரை காதலிப்பது என்று தெரியாமல் குழம்பினார் கவின்.

வலையில் விழுந்த அபிராமி

வலையில் விழுந்த அபிராமி

இதனால் எல்லோரிடம் நெருக்கமாக இருந்து பிட்டை போட்டு வைப்போம் என்று நடந்து கொண்டார். முதலில் அபிராமியே வந்து கவினின் வலையில் விழுந்தார்.

காதல் வானில்

காதல் வானில்

அபிராமியை விட சாக்ஷி பெட்டராக இருந்ததால் அபிராமியின் காதலை மறுத்துவிட்டு சாக்ஷிக்கு பிராக்கெட் போட்டார் கவின். சாக்ஷியும் ஏற்றுக்கொள்ள காதல் வானில் பறந்தனர் இருவரும்.

லாஸ்லியாவிடம் நெருக்கம்

லாஸ்லியாவிடம் நெருக்கம்

அப்போதுதான் கவினுக்கு மீண்டும் ஒரு குழப்பம் வந்தது. அதாவது, லாஸ்லியாவை காதலிக்கலாமா என்று. இருந்தாலும் பரவாயில்லை அவரிடமும் ஒரு அப்ளிகேஷனை போட்டு வைப்போம் என்று நெருக்கமாக பழகினார் கவின்.

சாக்ஷி சண்டை

சாக்ஷி சண்டை

லாஸ்லியாவும் மடங்கினார். கவினும் லாஸ்லியாவும் நெருங்கி பழகுவதை விரும்பாத சாக்ஷி, கவினுடன் சண்டை போட்டார். அதனை நல்லதுதான் என்று நினைத்த கவின், மேலும் மேலும் லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டினார்.

நடிக்க தொடங்கிய கவின்

நடிக்க தொடங்கிய கவின்

சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை லாஸ்லியாவுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்று எண்ணிய கவின் கடந்த வாரம் சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்தார். ஆனால் ஓபன் நாமினேஷன் நாளான இன்று, கவினின் பெயரை சாக்ஷி நாமினேட் செய்ததால் நல்லவர் போல் நடிக்க தொடங்கிவிட்டார் கவின்.

நான் செய்யவில்லை

நான் செய்யவில்லை

என் பெயரை சாக்ஷி நாமினேட் செய்தபோதுகூட நான் சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்யவில்லை என நல்லவரை போல் கூறுகிறார் கவின். கடந்த வாரமே சாக்ஷியை யாருக்கும் தெரியாமல் நாமினேட் செய்துவிட்டு இன்று ரொம்ப நல்லாவே நடிக்கிறார் கவின். ஏன் கவின் அவ்வளவு உண்மையாவா சாக்ஷியை காதலிக்கிறீங்க? அவ்வளவு நல்லவரா கவின் நீங்க?

மறந்துட்டோம்னு நினைச்சுட்டீங்களா?

மறந்துட்டோம்னு நினைச்சுட்டீங்களா?

சாக்ஷியை கடந்த வாரம் நாமினேட் செய்ததை மறந்துவிட்டாரா கவின் அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்தாரா? இல்லை மக்கள் இதையெல்லாம் கவனிச்சிருக்கமாட்டாங்க நாம இஷ்டத்துக்கு விளையாடுவோம் என்று நினைத்து இப்படி பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.

கவினின் நேர்மை

கவினின் நேர்மை

சேரன் குறித்து நேற்று வரை பின்னால் தவறாக பேசிவிட்டு, அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை க்ளாப்ஸ் மூலம் தெரிந்துகொண்டு இன்று சேரனுடன் நெருக்கமாக பழகுகிறார் கவின். அவரது நேர்மைக்கு இதுவும் ஒரு சான்று மக்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X