இவளுக இப்படிதான் பண்ணுவாளுக.. மாட்டிக்காத மச்சான்.. பொத்தாம் பொதுவாய் போட்டுத்தாக்கிய கவின்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், இவளுக இப்படிதான் பண்ணுவாளுக மாட்டிக்காத மச்சான் என முகெனுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி, முகெனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். முகென் பல முறை தனக்கு காதலி இருப்பதாக கூறியும் அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் அபிராமி.
மேலும் முகெனின் பலவீனத்தை புரிந்து கொண்டு அவர் மீது அதிக அக்கறை காட்டுவது போல் பிராக்கெட் போட்டு வருகிறார் அபிராமி. அது மட்டுமின்றி முகென் யாருடனும் பேசக்கூடாது என்றும் முகெனுடன் யாரும் பேசக்கூடாது என்ற மனநிலையிலும் உள்ளார் அபிராமி.

பொஸஸிவ்வா?
அபிராமியின் இந்த நடத்தை பிக்பாஸ் வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை. நேற்றைய எபிசோடில் முகென் சாக்ஷியிடம் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த அபிராமியிடம் நான் முகெனுடன் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா, பொஸஸிவ்வா இருக்கிறாயா என்று கேட்கிறார் சாகக்ஷி.

கோபமாக செல்லும் அபி
அதற்கு பதிலளிக்கும் அபிராமி ஆமாம் எனக்கு முகெனிடம் பேசினால் பொஸஸிவ்வாக இருக்கும் என்று கூறினார். இப்போது இது முக்கியமா என்று கேட்டு சாக்ஷியிடம் முகத்தை காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கோபமாக எழுந்து செல்கிறார்.

தலைவிரிக் கோலத்தில்
பின்னர் சாக்ஷி குறித்து லாஸ்லியாவிடம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அபிராமி, தான் எழுந்து வந்ததும் தன் பின்னால் முகென் வரவில்லை என்று கூறி அழுதார். பின்னர் பெட்ரூமில் தலைவிரிக் கோலத்தில் அழுத அபிராமியை முகென் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

கையில் காயம்
அப்போது அபிராமி தொடர்ந்து முகெனை குற்றஞ்சாட்டுவது போல் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த முகென் கட்டிலை கையால் அடித்து உடைத்தார். இதனால் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இப்படிதான் பண்ணுவாளுக
இதைத்தொடர்ந்து சக ஹவுஸ்மேட்ஸ்கள் உள்ளே வந்து முகெனை வெளியே அழைத்து சென்றனர். அப்போது என்ன நடந்தது என்று சக ஹவுஸ்மேட்ஸிடம் கூறினார் முகென். இதனைக் கேட்ட கவின், மச்சான் இவளுக இப்படிதான் பண்ணுவாளுக, லிவிங் எக்ஸாம்பல் நானே இருக்கிறேன் மாட்டிக்காத என்றார்.

கவின் அட்வைஸ்
கவின் பிரச்சனை நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பெண்களிடம் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார் கவின். இந்நிலையில் முகெனை விரட்டி விரட்டி காதலிக்கும் அபிராமி, ஓவர் பொஸஸிவ்வாக உள்ளார். இதனை வைத்தே கவின் இப்படி ஒரு அட்வைஸை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











