Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்! வெளுக்கும் சாயம்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் லாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளாத நிலையில் கவினுடனான காதலை முறித்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தனர்.
அப்போது சரி என்று கூறிய லாஸ்லியா, மறுநாளே கவினுடன் தனது பெற்றோர் விருப்பப்படி இருக்கப்போவதாக கூறினார். ஆனால் சொன்னப்படி லாஸ்லியா நடந்து கொள்ளவில்லை. தொடர்ந்து கவினிடம் கடலை போட்டு வருகிறார்.
அட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்!
பார்வையாளர்கள் கோபம்
மற்றவர்களுடன் பேசுவதை காட்டிலும் எப்போதும் கவினுடன் மட்டுமே அதிக நேரத்தை கழித்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியாவின் நடவடிக்கையால் அவர் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் பார்வையாளர்கள்.
வேடிக்கை பார்த்த கவின்
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் கவினுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், சப்போர்ட் செய்ய வேண்டும் என சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. அதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தார் கவின்.
உசுப்பேத்தும் கவின்
தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் கார்டன் ஏரியாவில் தங்க முட்டைக்கு கவினும் லாஸ்லியாவும் காவல் காக்கின்றனர். அப்போது சாண்டி அண்ணன் குடையை இங்கு சும்மாவா வச்சுது என்று லாஸ்லியாவிடம் கூறுகிறார் கவின்.
வில்லங்க சிரிப்பு
இதனைக் கேட்ட லாஸ்லியா, ஓ.. சாண்டியை நினைச்சேன்.. ஆனா இந்தளவுக்கு நினைக்கல என்று கூறி வில்லங்கமாக சிரிக்கிறார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சாண்டி, எதுக்கு என கேட்கிறார். அதற்கு லாஸ்லியா, உன்ன பத்தி ஒன்னு நினைச்சேன் அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று கூறி மீண்டும் வில்லங்கமாக சிரிக்கிறார்.
கவினின் பதில்
குடையை வச்சு மறைச்சேன்னு சொல்றியா என சாண்டி கேட்க, அதானே உன் ஸ்ட்ரேட்டஜி என்கிறார் கவின். இதனால் சாண்டியின் முகம் அப்படியே மாறிப் போகிறது.
தனியாவா பேசுவாறு?
இதனை கவனித்த தர்ஷன், இதில் என்ன ஸ்ட்ரேட்டஜி இருக்கு? நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க, அப்போ அவரு தனியாவா பேசுவாறு? எங்களோடதான் பேசுவாரு என்று சாண்டிக்கு ஆதரவாக கவினிடம் ஏறுகிறார் தர்ஷன்.
ஸ்ட்ரேட்டஜினு சொல்லாதீங்க
உடனே சமாளிக்கும் கவின், ஆமாம்டா அதை நான் தப்பு என்று சொல்லலேயே என்கிறார். அதற்கு தர்ஷன், அதனை ஸ்ட்ரேட்டஜி என்று சொல்லாதீர்கள் என்று கூறுகிறார். இதனால் கவின் முகம் லாஸ்லியாவின் முகமும் மாறுகிறது. இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.