அட கடவுளே.. இது என்ன கக்கூஸ் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் வந்த சோதனை! வைரலாகும் அந்த போட்டோ !
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினையும் லாஸ்லியாவையும் வைத்து வெளியாகியிருக்கும் பொது நல போர்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், எப்போதும் பாத்ரூமில்தான் உள்ளார். இதனால் அவரை கக்கூஸ் கவின் என்றுதான் அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு வேலை அவர் வீட்டுக்குள் இருந்தால் செய்யும் பிரதாண பணி பெண்களுடன் கடலை போடுவதுதான். அபிராமி, ஷெரின், சாக்ஷி என சுற்றி வந்த கவின் தற்போது லாஸ்லியாவிடம் வந்து நிற்கிறார்.

மழுப்பும் லாஸ்லியா
லால்ஸியாவும் கவின் மீது காதல் கொண்டுள்ளார். கவினை சைட் அடிக்கிறேன், கவினை பிடிக்கும், கவினுடன் கதைக்காமல் இருக்க முடியாது என்று கூறி வரும் லாஸ்லியா கவினுடன் இருப்பது நட்புதான் என்றும் மழுப்பி வருகிறார்.

பொது நல போர்டு
சரி விஷயத்துக்கு வருவோம்.. பாத்ரூமே கதி என கிடக்கும் லாஸ்லியாவையும் கவினையும் வைத்து பொது நல போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டின் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
இருவரின் போட்டோ
தேனி அல்லிநகரம் நகராட்சியில்தான் அந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் நவீன கட்டணக் கழிப்பறை மற்றும் குளியலறை என குறிப்பிட்டு கவினின் போட்டோவை போட்டு ஆண்கள் என்றும் லாஸ்லியாவின் போட்டோவை போட்டு பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயாய் பரவும் போட்டோ
ஆட்டோ ஸ்டாண்ட், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாத்ரூமுக்கு வெளியே இந்த போட்டோ வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதை அப்படியே கேமராவில் கேட்ச் செய்து டிவிட்டரில் வைரலாக்கியுள்ளனர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











