சீரியஸாதான் காதலிக்கிறோம்.. நோண்டிய வனிதா.. ஒப்புக்கொண்ட கவின்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், தாங்கள் சீரியஸாக காதலிப்பதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இதனை லாஸ்லியா ஏற்கனவே ஒப்புக்கொண்டார்.
தங்களின் காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது வெளியே போய்தான் என்று முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் லாஸ்லியா. ஆனால் கவின் தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் இதுவும் குழப்பமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது.

வார்னிங்
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் இருவரும் நள்ளிரவில் இருட்டில் மைக் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசினர். இந்தக் காட்சியை ஒளிப்பரப்பிய கமல், இது விதிமீறல் என இருவருக்கும் வார்னிங் கொடுத்தார்.

வெளியே போய் பேசுங்கள்
மேலும் பிக்பாஸ் வீட்டில் பேசக்கூடாத விஷயம் என்றால் வெளியே போய் பேசுங்கள் என்றும் கூறினார் கமல். இதன்மூலம் ஓரளவுக்கு உறுதியானது இருவரின் காதல் விவகாரமும்.

ஹவுஸ்மேட்ஸ்கள்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நீங்கள் ஏன் பிக்பாஸ் வின்னராக வேண்டும் என்ற சக ஹவுஸ்மேட்ஸ்களின் கேள்விக்கு ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ்ம் தங்கள் பக்கத்தின் நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டும்.

சாக்ஷியுடன் விளையாட்டு
அதன்படி கவினின் டர்ன் வந்தபோது அவரின் காதல் விளையாட்டை கையில் எடுத்தார் வனிதா. அப்போது சாக்ஷி உங்களிடம் காதல் என்று பழகியது விளையட்டா என்று கேட்டார். ஆமாம் அது விளையாட்டு தான் என்ற கவின், சாக்ஷி அதனை உண்மையாக எடுத்துக்கொள்ள 100 சதவீதம் நான்தான் காரணம் என்றும் கவின் கூறினார்.

சீரியஸாதான் இருக்கோம்
அப்போது இப்ப எப்படி இருக்கிங்க சீரியஸாவா விளையாட்டாவா என்று கேட்டார் வனிதா. அதற்கு பதில் சொன்ன கவின் இப்போது நான் எவ்வளவு சீரியஸாக இருக்கிறேன் என்பதும் எனக்கும் தெரியும் சீரியஸாக இருக்கும் அந்த ஆளுக்கும் தெரியும் என்றார்.

ஒப்புக்கொண்ட கவின்
வனிதா தொடர்ந்து கவினின் காதல் விவகாரம் குறித்து கேட்டபோது லாஸ்லியா டென்ஷனானார். ஒரு வழியாக கவின், தானும் லாஸ்லியாவும் சீரியஸாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











