கதறி அழும் சாண்டி அன்ட் கவின்.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினும் சாண்டியும் கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாண்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் லாஸ்லியா வந்த பிறகு அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சாண்டிக்கு கவின் லாஸ்லியாவுடன் பழகுவது பிடிக்கவில்லை. இதனால் கவினுக்கு அட்வைஸ் செய்கிறார். இந்த விஷயம் லாஸ்லியாவுக்கு பிடிக்கவில்லை.

பட்டும் படாமல் சாண்டி
இதனால் சாண்டி, தன்னை கிண்டல் செய்யக்கூடாது என கூறி வருகிறார். இதுதொடர்பாக கவினிடமும் புகார் செய்து வருகிறார். இதன் காரணமாக சாண்டி கவின் விவகாரத்தில் பட்டும் படாமல் இருக்கிறார்.

கவின் நாமினேஷன்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் முதலில் கவின், ஷெரினையும் சேரனையும் நாமினேட் செய்தார். அதற்கு இருவரும் பல வெற்றிகளை பெற்றுவிட்டதால் இந்த வெற்றியை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறினார்.

உண்மையை சொன்ன கவின்
ஆனால் அதனை ஏற்காத வனிதா, வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள் என்றார். உடனே ஷெரினை எனக்கு பிடிக்காது என்றும், தன்னை நாமினேட் செய்ததால் அவரை தான் நாமினேட் செய்வதாகவும் உண்மையை கூறினார் கவின்.

சாண்டி நாமினேட்டிங்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கவினையும் லாஸ்லியாவையும் சாண்டி நாமினேட் செய்கிறார். முன்பு இருந்த கவினை எனக்கு தெரியும் எவ்வளவு ஜாலியாக இருப்பான். எனக்கு பழைய கவின் வேண்டும் என்று கூறுகிறார் சாண்டி.

கவின் சாண்டி கதறல்
இதனைக்கேட்டு கவின் அழுகிறார். சாண்டியும் கவினை வெளியே போடா எனக்கூறி அழுகிறார். இதனை பார்த்த வனிதா, நீங்கள் அழுவதை பார்த்து மக்கள் அழுவார்கள் என்று நினைக்காதீர்கள், மக்கள் சிரிப்பார்கள், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











