Bigg Boss Tamil: சாண்டி அண்ணனோட படம் பண்ணப் போறேன்.. மீண்டும் பிக் பாஸ் வீட்டில் கவின்.. செம ஷோ!
சென்னை: இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீடு களைகட்டி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் கவின் மற்றும் சாண்டி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியது தான்.
பிக் பாஸ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நாளை ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகும். கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 2 சீசன்களாக விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் முதல் முறையாக இருவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டது. மேலும், பெண் போட்டியாளரான பார்வதிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
பிக் பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்: கவின் மற்றும் சாண்டி உள்ளே வந்து பொங்கல் கொண்டாட்டத்தை பிக் பாஸ் வீட்டில் களைகட்ட வைத்துள்ள புதிய புரொமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களாக பங்கேற்ற கவின் மற்றும் சாண்டி இருவரும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். கவின் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நிலையில், சாண்டி தென்னிந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி வருகிறார்.
கவின், சாண்டி இணைந்து ஒரு படம்: பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த கவின் என் அண்ணன் சாண்டியோட ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன் என்கிற சூப்பரான சினிமா அப்டேட்டையும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் சொல்லியுள்ளார். நடன இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் சாண்டி அசத்தி வரும் நிலையில், கவின் - சாண்டி காம்போ சினிமாவில் பக்காவாக செட்டாகும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
டைட்டில் வின்னர் யாரு?: பிக் பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளர்களும் உள்ளே இருந்துக் கொண்டு பொங்கலை கொண்டாடினாலும், அவர்கள் எல்லாம் இன்றுடன் வெளியேறிவிடுவார்கள். இறுதிப் போட்டியாளர்களாக கிராண்ட் ஃபினாலேவுக்கு செல்லப்போவது திவ்யா கணேஷன், அரோரா, சபரிநாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் தான். இதில், பெண் போட்டியாளர் டைட்டிலை வெல்வாரா? அல்லது ஆண் போட்டியாளர் வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திவ்யா அல்லது சபரிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். அதே சமயம், அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரமும் டஃப் போட்டியாளர்கள் தான்.


Click it and Unblock the Notifications











