பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த கவின்.. லாஸ்லியா ரியாக்ஷன பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் கவின், தர்ஷன் ஆகியோர் மீண்டும் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 103வது நாளை எட்டியுள்ளது. இதன் பினாலே நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனும் கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

ரூ. 5 லட்சம் பணம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து, கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த வாரம் வெளியேறினார். லாஸ்லியா, சாண்டி என ஹவுஸ்மேட்ஸ்கள் கதறி அழுதும் கேட்காத கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அதிர்ச்சி ஏமாற்றம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். டைட்டில் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏமாற்றத்தையும் அளித்தது.

தர்ஷன், கவின் வருகை
இந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று விருந்தாளிகளாக அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் அவர்களை, சாண்டி, முகென் என ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து வரவேற்று தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.

சேலையில் அசத்தல்
கவினை காதலிக்கும் லாஸ்லியா அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார் போல, எல்லோரும் சுடிதாரில் இருக்க ஸ்லீவ்லஸ் ஜாக்கெட், சேலை என அசத்தலாக உள்ளார். கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதை பார்த்த அவர் துள்ளிக்குதித்தார்.

ஏங்கும் லாஸ்லியா
அனைவரையும் ஆரத்தழுவும் கவினை ஏக்கத்துடன் வச்ச கண் வாங்காமல் பார்க்கும் லாஸ்லியா, அவரது கையைப்பிடித்து இழுத்து தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தர்ஷனை முகெனும், கவினை சாண்டியும் தூக்கி கொண்டு கார்டன் ஏரியாவை வலம் வந்தார்.

இன்று விருந்து
பின்னர் டைனிங் டேபிளில் உள்ள சிக்கனை வைத்து வெளுக்கின்றனர் அவர்கள். இப்படியாக உள்ளது முதல் புரமோ. கடந்தே சில நாட்காள கவின், லாஸ்லிய காதல் லீலைகளை பார்க்காமல் தவித்த அவர்களின் ரசிகர்களுக்கு இன்று விருந்து கிடைக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











