பிரேக்கப் கன்ஃபார்ம்டு.. கழட்டிவிட்ட கவின்.. கதறும் சாக்ஷி.. லாஸ்லியா என்னைக்கு இப்படி அழபோகுதோ?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 :Day 38 : கவினுக்காக அடித்துக்கொள்ளும் லாஸ்லியா-சாக்ஷி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே மலர்ந்த காதல் இன்றுடன் முறிந்துவிட்டதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாக்ஷியும் அண்மையில் தங்களின் காதலை பகிர்ந்து கொண்டனர். அபிராமி கவினை காதலிக்கிறார் என்று தெரிந்தும் கவினை காதலிக்க தொடங்கினார் சாக்ஷி.

கவினும் சாக்ஷியும் திருமணம் செய்து கொள்வது வரை பேசினர். கவினும் சாக்ஷியிடம் நிறைய அட்வான்டேஜ் எடுத்தார். அவரை கட்டிப்பிடிப்பது, தடவுவது என எல்லை மீறியது அவர்களின் காதல்.

எந்தளவுக்கு உண்மை?

எந்தளவுக்கு உண்மை?

கவின் சாக்ஷிக்கும் அபிராமிக்கும் பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் வைத்து லிப் டு லிப் முத்தம் கொடுத்ததாகவும் தகவல் பரவி வருகிறது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வெளியாகும் வீடியோ

வெளியாகும் வீடியோ

ஆனால் லாஸ்லியாவிடமும் அத்துமீறி நடந்துக்கொள்கிறார் கவின். லாஸ்லியாவின் கன்னத்தை தடவுவது, மேலே கை வைப்பது என அவரிடமும் அத்துமீறி வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாயின.

கவினுக்காக சண்டை

கவினுக்காக சண்டை

கவின் லாஸ்லியாவுடன் நெருக்கமாக பழகுவதை சாக்ஷி கொஞ்சமும் விரும்பவில்லை. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கவினுக்கும் தனக்குமான ஃபிரன்ட்ஷிப் குறித்து நான் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய லாஸ்லியா சாக்ஷியிடம் சண்டை போட்டார்.

கதறும் சாக்ஷி

கதறும் சாக்ஷி

அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் பாத்ரூமில் கண்ணீர் விட்டு அழுகிறார் சாக்ஷி. அப்போது ரேஷ்மாவும் ஷெரினும் சாக்ஷிக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

கவினுக்கும் பிரேக்கப் ஆகும்

கவினுக்கும் பிரேக்கப் ஆகும்

அதான் பிரேக்கப் ஆகிவிட்டதாக சொல்லியாச்சுல்ல இங்க உட்காந்து அழுறதால் எந்த பயனும் இல்லை, இதெல்லாம் வேஸ்ட், எல்லாருக்கும் பிரேக்கப் ஆகும், கவினுக்கும் பிரேக்கப் ஆகும் என்றும் கூறும் ரேஷ்மா நாளை புதிய தினம் அதை பற்றி யோசி என்கிறார்.

தொடர்ந்து அழும் சாக்ஷி

தொடர்ந்து அழும் சாக்ஷி

ஷெரினும் இதைப்பற்றியே யோசித்து அழுதால் இது உன்னை சாப்ட்டுவிடும் என்றும் அதை விட்டு வேற வேலையை பார் என்றும் அட்வைஸ் செய்கிறார். ஆனால் சாக்ஷி தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார்.

என்னைக்கு லாஸ்லியா அழப்போகுதோ?

என்னைக்கு லாஸ்லியா அழப்போகுதோ?

கவின் தன்னுடைய காதலை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார் போல. கவினை விட்டுக்கொடுக்காமல் லாஸ்லியா சண்டை போட்டதால், அதையே க்ரீன் சிக்னல் என நினைத்து ஒருவேளை இந்த காதலை முறித்திருப்பாரோ? என்னைக்கு லாஸ்லியா இப்படி அழப்போகிறாரோ?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X