கஸ்தூரி பெயர் காக்காவாம்.. இதுல கா.. கா.. ன்னு சவுண்டு வேற! எல்லாத்துக்கும் ஒரு அளவு இல்லையா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் பெண்கள் விஷயத்தில் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவராக போயிக்கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு முகவரி கொடுத்ததே விஜய் டிவிதான்.
தற்போது நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி சார்பில் பங்கேற்றுள்ளார்.

சுயநலத்துக்காக
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். வந்தது முதலே தனது சுயநலத்துக்காக பெண்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்.

ஒரே நேரத்தில் காதல்
அபிராமி, சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா என நான்கு பேரிடமும் கடலை போட்டு, கட்டியணைத்து, கண்ட இடத்தில் கை வைத்து தடவி வந்தார். பின்னர் சாக்ஷியை காதலிப்பதாக கூறிய அவர், லாஸ்லியாவையும் காதலித்தார்.

கேவலமான விளக்கம்
ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் கமல்ஹாசனிடம் செல்ல, ஒரு பெண்ணை காதலித்தால் தான் சிக்கல் வரும், நான்கு பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்று நினைத்தேன் என கேவலமான ஒரு விளக்கத்தை கொடுத்தார்.

எல்லை மீறும் கவின்
இதனைக்கேட்ட இது தப்பில்லையா என்றாரே தவிர வேறு எதுவும் பெரிய ரியாக்ஷன் கொடுக்கவில்லை. மது விஷயத்திலும் பல முறை எல்லை மீறியிருக்கிறார் கவின்.

கஸ்தூரியை கண்டால் எரிச்சல்
தற்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ள கஸ்தூரியை கண்டாலே கவினுக்கு பிடிக்கவில்லை. கஸ்தூரி பேசுவதை கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது. வெறுப்பேற்றும் வகையிலேயே இருக்கு அவர் பேசுவது என கேமரா முன்பு பேசுகிறார் கவின்.

கா.. கா.. சத்தம் வேற
மேலும் கஸ்தூரிக்கு காக்கா என்று பட்டப் பெயர் வைத்துள்ள கவின், அவரை பார்க்குஙம போதெல்லாம் கா.. கா.. என கஸ்தூரிக்கு தெரியாமல் கத்தி வருகிறார். இதனை சாண்டியும் என்கரேஜ் செய்து வருகிறார்.

மது கத்தியதில் தவறில்லை
நடுநிலையானவர் நேர்மையானவர் என்று புகழப்படும் தர்ஷன் கூட இந்த கூத்தையெல்லாம் கொண்டாடி வருகிறார். இப்படிப்பட்டவர்களை, மது கத்திவிட்டதில் எந்த தவறுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கவினை மட்டும் வச்சீருக்காங்க
எப்போதோ பெண்களை உரசியதை நிகழ்ச்சியில் கூறியதற்காக மன்னிப்பு கேட்டப்பிறகும் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்கள். இந்நிலையில் இந்த சீசனில் கன்டென்ட் கொடுப்பதற்காகவும் பிரச்சனை வராமல் நிகழ்ச்சியில் நீடிப்பதற்காக நான்கு பெண்களை காதலித்தேன் என்று கூறிய கவினை இன்னும் நிகழ்ச்சியில் வைத்துள்ளார்கள்.

ஏன் கண்டிப்பதில்லை?
என்னதான் விளையாட்டு என்றாலும் அதற்கு ஒரு எல்லை இல்லையா? கமல் இந்த விஷயங்கள் எதையும் ஸ்ட்ரிக்ட்டாக கண்டிக்கவில்லை. குறிப்பாக சாண்டியும் கவினும் என்ன செய்தாலும் கமல் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இருவரும் விஜய்டிவிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் கமல் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா?


Click it and Unblock the Notifications











