கஸ்தூரியை படு கேவலமாக கட்டங்கட்டி அசிங்கப்படுத்திய கவின்.. உச்சக்கட்ட கொந்தளிப்பில் பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரியை கவின் கேவலமாக இன்சல்ட் செய்வது இன்றைய புரமோவில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரி வந்தவுடன் கவின் நான்கு பேரை காதலிப்பதாக கூறி அவர்களின் எமோஷன்ஸ் உடன் விளையாடிதை கேட்டு கிழித்து தொங்கவிட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த கவின் மிரண்டு போனார். கஸ்தூரியிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

கஸ்தூரியை பிடிக்கலையாம்
கஸ்தூரி, கவினை கமலின் எதிரே வில்லன் என்றது, நான்கு பெண்களை ஏமாற்றியதாக கூறியது உள்ளிட்டவற்றால் அவர் மீது செம காண்டில் இருந்தார் கவின். அதனால் கஸ்தூரியை கண்டாலே அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது.

ஜெயிலுக்கு அனுப்பிய கவின்
பிக்பாஸிடம் கஸ்தூரியை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. அவர் பேசுவதும் கடுப்பாக்குகிறது என்றார். மேலும் அவர் நினைத்தப்படியே கஸ்தூரியை ஜெயிலுக்கு அனுப்பினார்.

கா கா என கத்தும் கவின்
அதுமட்டுமல்லாமல் கஸ்தூரிக்கு காக்கா என்று பெயரிட்டுள்ள கவின், அவரை பார்க்கும் போதெல்லாம் கா, கா என கத்தி வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையை உடனிருப்பவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.

கஸ்தூரி கருத்து
இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சிட்டவுட் ஏரியாவில் அமர்ந்திருக்கும் கவின் கேங்கிடம், அன்னைக்கு பேசல இன்னைக்கு ஏன் பேசுனீங்க என்று பேசுவது தவறு என்கிறார் கஸ்தூரி.

வாங்கடா வாங்கடா
இதனை கேட்டதும் கவினுக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகிறது. லாஸ்லியாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாங்கள் உள்ளே போகலாம் என கஸ்தூரி பேசிக்கொண்டிருக்கும் போதே அனைவரையும் வாங்கடா வாங்கடா என திரட்டிக்கொண்டு கஸ்தூரியை அசிங்கப்படுத்திவிட்டு உள்ளே செல்கிறார்.

அசிங்கப்படுத்தும் கவின்
பின்னர் கஸ்தூரி உள்ளே வந்து பேசும் போதும், அனைவரையும் ஏ வா.. வா.. வேலைக்காவது வேலைக்காவது என்று கூறியபடி மீண்டும் கஸ்தூரியிடம் பேசவிடாமல் அனைவரையும் வெளியே அழைக்கிறார். அப்போது கொஞ்சம் இருங்க என கெஞ்சும் கஸ்தூரியிடம் நீங்க எங்க அண்ணனை கேஸ்ல இழுத்து விட்டுடுவிங்க உங்கக்கிட்ட பேசமுடியாது என்று ஹியூமன் ரைட்ஸ் பற்றியெல்லாம் பேசுகிறார் கவின்.
வேற லெவல்
பின்னர் கஸ்தூரி, அப்படி பார்த்தால் நீங்கள் மீண்டும் நான்கு பேரிடம் பேசியிருக்கக்கூடாது என்கிறார். உடனே குரலை உயர்த்தி கஸ்தூரியிடம் எகுறுகிறார் கவின். இப்படியாக பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் பிரச்சனை இரண்டாக பிளவுபட்டு வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











