இன்னைக்கு ஏதோ இருக்கு.. கொளுத்தி போட்ட மொட்டக் கடுதாசி.. கண்ணீர்விடும் கவின்.. எழுந்து சென்ற சாக்ஷி!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் சாக்ஷி உடனான காதல் விவகாரத்தை கிளற கவின் கண்ணீர் விட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் பெண்களுடன் கடலை போடுவதும் மாறி மாறி காதலிப்பதும் அனைவரும் அறிந்ததுதான். மச்சான் மச்சான் என பெண்களை கண்ட இடங்களில் கை வைத்து அத்துமீறுவது என கொண்டாடி வருகிறார் கவின்.
கவினின் இந்த நடவடிக்கை மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டி வரும் கவின், தனது காதலியான சாக்ஷியை விட்டு விலகியுள்ளார்.

மொட்ட கடுதாசி
இந்நிலையில் இன்று கொடுத்துள்ள டாஸ்க்கின்படி கவின் - சாக்ஷி இடையிலான காதல் விவகாரத்தை மீண்டும் தூசு தட்டியுள்ளார் பிக்பாஸ். அதாவது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மொட்டக் கடுதாசி டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

லாஸ்லியா பதில்
இதுதொடர்பான புரமோ இன்று வெளியானது. அதில் கவின் - சாக்ஷி காதல் விவகாரம், லாஸ்லியாவின் உண்மையான முகம் என விடை தெரியாத பல கேள்விகளை மொட்ட கடுதாசியாக கேட்டுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் லாஸ்லியா, எல்லோரிடமும் அன்பாகதான் இருப்பேன், பின்னாடி பேச வேண்டும் என்றும் அவசியம் எனக்கில்லை என்கிறார்.

நா தழுதழுத்து..
இதைத்தொடர்ந்து பேசத்தொடங்கும் கவின், சாக்ஷியுடனான காதல் குறித்து ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் அதனை சொல்ல முடியாமல் நா தழுதழுத்து கண்ணீர் விடுகிறார்.

கண்ணீர்விடும் சாக்ஷி
கவினின் இந்த சீனை பார்த்த சாக்ஷி சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறார். பின்னர் வெளியே அமர்ந்தபடி ஷெரினிடம் கண்ணீர் விட்டு அழுகிறார். இப்படியாக முடிகிறது இன்றைய முதல் புரமோ.
நல்லவன்னு நம்பனுமா?
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். கவினையும், லாஸ்லியாவையும் கண்டமேனிக்கு திட்டி டிவிட்டி வருகின்றனர். இந்த புரமோவை பார்த்து இப்போது நாங்கள் கவினை நல்லவன்னு நம்பனும் அதுக்கு தானே இந்த புரமோவை போட்டுள்ளீர்கள் என விளாசி வருகின்றனர்.
யாராலும் ஓவியாவாக முடியாது
லாஸ்லியா ஓவியா மாதிரி இருக்க முழுசாக ட்ரை பண்ணுகிறாள். அவரது நடவடிக்கை ஓவியா போன்று உள்ளது. யாராலும் எங்களின் ஓவியா போன்று இருக்கவே முடியாது என்று கூறி வருகின்றனர்.

கடுப்பாகுது லாஸ்லியா
லாஸ்லியா இந்த ஆட்டிட்யூடையும் அணுகுமுறையையும் கைவிடு. ஏன் இதுபோன்று நடந்து கொள்கிறாய் என்று தெரியவில்லை. அனைவரும் உன்னை கார்னர் செய்ய வேண்டும் என முயச்சிக்கிறாயா அல்லது உன்னை கடினமாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறாயா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











