எவ்வளவு சீப்பான வேலை செய்திருக்கார் இந்த கவின்.. மீரா மிதுன் சொன்ன உண்மை!

சென்னை: கவின் செய்த சீப்பான வேலை ஒன்றை மீரா மிதுன் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை டாஸ்க்கின் போது சேரன் தன் வயிற்றில் தவறான நோக்கத்தில் கை வைத்துவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார் மீரா மிதுன். இதனால் அதிர்ச்சியடைந்த சேரன், நான் எந்த தவறான நோக்கத்திலும் கை வைக்கவில்லை என்று கூறினார்

அப்போது மொத்த ஹவுஸ்மேட்ஸ்ம் சேரனுக்கு ஆதரவாக பேசினர். ஆனால் சாண்டி, வந்த புதிதில் நீங்கள் கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று சொன்னீங்களே என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.

மானத்தை இழந்து

மானத்தை இழந்து

இதைத்தொடர்ந்து தனது குழந்தைகள் மீதும் சத்தியம் செய்த சேரன் எந்த தவறான எண்ணமும் என் மனதில் இல்லை என கண்ணீர்விட்டு கதறினார். தனது பெயரையும் மானத்தையும் இழந்து இங்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அவர், தான் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக கூறினார்.

யாராவது ஒருவர் மட்டும்

யாராவது ஒருவர் மட்டும்

அப்போது மதுமிதா, தர்ஷன், அபிராமி, கவின் ஆகியோர் சேரனுக்கு ஆதரவாக அவரது பெட்டின் அருகே சென்று பேசினர். அப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்த பின், அந்த பெண் இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது, ஒன்று அந்த பெண் இருக்க வேண்டும் அல்லது நான் இருக்கவேண்டும் என்றார்.

அங்கு அப்படி பேசிவிட்டு

அங்கு அப்படி பேசிவிட்டு

மேலும் என்னை பிடித்தவன் சேரன் தவறு செய்யவில்லை என்பான், பிடிக்காதவன் கையை போட்டான் என்பான் என்றும் கூறினார் சேரன். அதற்கு பதிலளித்த கவின் பொது புத்தி உள்ளவர்கள் தான் அப்படி பேசுவார்கள் அண்ணன் என்று சேரனுக்கு ஆதரவாக பேசினார்.

மீராவிடம் பற்றவைத்த கவின்

மீராவிடம் பற்றவைத்த கவின்

இந்நிலையில் தற்போது வெளியே வந்த அவர் கவின் தன்னிடம் கூறியதாக பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அதாவது சேரன் கையும் களவுமாக மாட்டியபோது, டிராமா செய்து அதனை மாற்றிவிட்டதாக கூறி மீரா மீண்டும் சேற்றை வாரி பூசிக்கொண்டார்.

கண்ணீரே வரவில்லை

கண்ணீரே வரவில்லை

மேலும் சேரன் அழுத போது அவர் கண்களில் இருந்து ஒரு துளி கூட கண்ணீர் வரவில்லை என்று கவின் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் மீரா மிதுன். அதுமட்டுமின்றி ஒன்று அவர் இருக்க வேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும் என சேரன் கூறியதையும் மீராவிடம் வேறு மாதிரியாக திரித்து கூறியுள்ளார் கவின்.

கொளுத்தி போட்ட கவின்

கொளுத்தி போட்ட கவின்

அதையும் தற்போது போட்டுடைத்துள்ளார் மீரா. அதனால்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகும் போது கூட, சேரனிடம் நீங்கள் சொன்னது போலவே முதலில் என்னை அனுப்பிவிட்டீர்கள் என்றார் மீரா. அது கவின் கொளுத்தி போட்டதன் எதிர்வினைதான் போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X