சுய சிந்தனையே இல்லாமல், கூட்டத்தில் ஒளிந்து வாழும் கவின்.. அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 86 : மக்களின் அனுதாபங்களை எதிர்பார்க்கும் சேரன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், கவினை சுய சிந்தனை இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொருவரின் ஒரிஜினாலிட்டியும் தெரியும் வகையில் டாஸ்க் கொடுத்துவருகிறார். இதனால் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில் தான் ஏன் ஜெயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஹவுஸ்மேட்ஸ்கள் விளக்கமளிப்பது போன்ற முதல் பிரமோ காலையில் வெளியானது.

கண்ணாடி குடுவை

கண்ணாடி குடுவை

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ்கள் எப்படி என்பது குறித்து கூறி ஒவ்வொருவரும் கண்ணாடி குடுவையில் அதற்கேற்ற நிறத்தை ஊற்றி வெளிப்படுத்த வேண்டும் என டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

சுய சிந்தனை இல்லாத கவின்

சுய சிந்தனை இல்லாத கவின்

அதன்படி விளையாட்டை முதலில் தொடங்கிய தர்ஷன், சுய சிந்தனையும் தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என தைரியமாக கூறி கவின் பக்கத்தில் இருந்த குடுவையில் நீல நிற தண்ணீரை ஊற்றினார்.

நடிக்கும் பரிதாபங்கள்

நடிக்கும் பரிதாபங்கள்

தொடர்ந்து மக்களின் பரிதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என்று கூறும் தர்ஷன், அதற்காக கவின் பெயரையும் சேரன் பெயரையும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து சேரன் குடுவையில் சிவப்பு நிற நீரை ஊற்றுகிறார் தர்ஷன்.

குறை குணாதிசயங்கள்

குறை குணாதிசயங்கள்

இதுவரை நண்பர்கள், அண்ணன், தங்கை, அப்பா, மகள் என்று உறவுகளாக இருந்து வந்த ஹவுஸ்மேட்ஸ்கள், போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க ஒவ்வொருவரின் குறைகளையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் போட்டியாளர்கள்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எதையும் நியாயமாக நேர்மையாக மனதில் பட்டதை பட்டென பேசும் தர்ஷன் கவின் சேரன் குறித்தும் அதிரடியாய் பேசியுள்ளார். இன்றைய எபிசோடுக்கான புரமோவே அசத்தலாக உள்ள நிலையில் நிச்சயம் நிகழ்ச்சியும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X