சேரன் உன்னை வைத்து டிராமா செய்கிறார்.. லாஸ்லியாவை உசுப்பேற்றிய கவின்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சேரன் குறித்து தவறாக கூறி லாஸ்லியாவை உசுப்பேற்றி விடுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் சேரனும் தந்தை மகள் என்ற நல்ல பாண்டிங்கில் இருந்தனர். லாஸ்லியாவை தனது சொந்த மகளாகவே பாவித்து பழகி வருகிறார் சேரன்.

ஆனால் லாஸ்லியா ஏதோ ஒரு ஆதாயத்திற்காகதான் சேரனுடன் பழகுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதனை பார்த்த ரசிக்ரகள் லாஸ்லியாவை நம்பாதீர்கள் சேரன் என சமூக வலைதளங்களில் கருத்து கூறினர்.

கவனுடன் சுற்றும் லாஸ்

கவனுடன் சுற்றும் லாஸ்

இந்நிலையில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் என கூட்டு சேர்ந்தார் லாஸ்லியா. இதனால் கடந்த ஒரு வாரமாக சேரனுடன் பேசுவதில்லை, சேர்ந்து சாப்பிடுவதுமில்லை. எப்போதும் கவினுடனே சுற்றி வந்தார்.

சேரனின் நிலைப்பாடு

சேரனின் நிலைப்பாடு

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் சேரனிடம் கேட்டார். அப்போது தனது நிலைப்பாட்டை கூறிய சேரன், தனது மகளுக்கு தற்போது நண்பர்களுடன் இருக்க தோன்றியுள்ளது, அதனால் அவர்களுடன் இருக்கிறார். இதில் எந்த வருத்தமும் இல்லை என்றார்.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

இதுகுறித்து லாஸ்லியாவிடம் கமல் கேட்டபோது சேரன் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். அதனை கேட்ட சேரன், தனது மகள் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காகதான் அவரது பெயரை வொர்ஸ்ட் பர்ஃபாமன்ஸிற்கு பரிந்துரைத்தேன் என்றார்.

அப்பா மகள் கண்ணீர்

அப்பா மகள் கண்ணீர்

இதைத்தொடர்ந்து சேரனும் லாஸ்லியாவும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். லாஸ்லியா சேரனிடம் சாரி சொல்லி அழுதார். சேரனும் கண்ணீர்விட்டார். இருவரும் சமாதாமாயினர்.

கவினுக்கு பிடிக்கவில்லை

கவினுக்கு பிடிக்கவில்லை

ஆனால் சேரனும் லாஸ்லியாவும் மீண்டும் பேச தொடங்கியதால் கவினின் முகம் மாறிவிட்டது. இருவரும் மீண்டும் பேச தொடங்கியது கவினுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. லாஸ்லியாவடம் சரிவர பேசாமல் மூஞ்சை தூக்கிவைத்துக் கொண்டிருந்தார்.

கோபமான கவின்

கோபமான கவின்

பின்னர் இரவு தூங்குவதற்கு முன்பு சேரன், கிச்சனில் இருந்த லாஸ்லியாவிற்கு வழக்கம்போல் குட்நைட் சொன்னார். அப்போது அங்கிருந்த கவின், லாஸ்லியாவிடம் பேசாமல் இருந்தார். இதனால் கவலையடைந்த லாஸ்லியா, நீ ஏன் என்னிடம் பேசாமல் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டிருக்கிறாய் என்றார்.

உசுப்பேற்றும் கவின்

உசுப்பேற்றும் கவின்

அதற்கு பதிலளித்த கவின், உன்னை வைத்து அவர் டிராமா செய்கிறார். அதனை நீ புரிந்துகொள்ள வேண்டும் என லாஸ்லியாவிடம் சேரன் குறித்து தவறாக போட்டுக்கொடுத்து உசுப்பேற்றுகிறார். இதன் வெளிப்பாடோ என்னவோ இன்றைய நாமினேஷன் புராசஸ்ஸில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X