கவினுக்கு டைமே சரியில்ல போல.. அடி மேல் அடி.. தொடர் இழப்புகள்.. சரிவுகள்.. அவமானங்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சக போட்டியாளர்களாக இருந்த நான்கு பெண்களிடமும் கடலை போட்டு வந்தார். இதில் சாக்ஷியுடன் போட்ட கடலை காதலாக மாறியது.

ஆனால் லாஸ்லியாவும் கவினை காதலித்ததால் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையிலான காதல் முறிந்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் கமல்ஹாசனுக்கு பதில் கூறிய கவின், நான்கு பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்று நினைத்தேன் என்றார். கவினின் இந்த பதிலால் சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

 டோட்டல் டேமேஜ்

டோட்டல் டேமேஜ்

அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கவினே தன் வாயால் ஒப்புக்கொண்ட பிறகும் ஏன் வெளியேற்றப்படவில்லை என விஜய் டிவியையும் திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள். இதனால் கவினின் பெயர் டோட்டலாக டேமேஜ் ஆனது.

ஜெயில் தண்டனை

ஜெயில் தண்டனை

இந்நிலையில் கவினின் தாயார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு திருச்சி மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சீட்டு கம்பெனி நடத்தி பணத்தை ஏமாற்றிய வழக்கில் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்.

அறிவிக்கப்படவில்லை

அறிவிக்கப்படவில்லை

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிகிறது.

காதலை துண்டித்தார்

காதலை துண்டித்தார்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் பெற்றோர் கவினுடனான காதலை கைவிடுமாறு கதறினர். இதனை தொடர்ந்து என் பெற்றோரின் விருப்பம் தான் முக்கியம் என கூறி கவினுடனான காதலை துண்டித்தார் லாஸ்லியா.

காதல் தோல்விகள்

காதல் தோல்விகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாகவே வெளியில் தனக்கு ஒரு காதல் இருந்ததாகவும், மூன்று வருடம் நீடித்த அந்த உறவு பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு முறிந்துவிட்டதாகவும் கூறியிருந்தார் கவின். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவர் செய்த இரண்டு காதல்களும் தோல்வியில் முடிந்தது.

கவினுக்கு அவமானம்

கவினுக்கு அவமானம்

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவினின் நண்பர் பிரதீப் ஆன்டனியும், நிகழ்ச்சியில் வைத்து அவரை பளார் என அறைந்து விட்டார். இதனை பார்த்த பார்வையாளர்கள் நாங்கள் செய்ய நினைத்ததை நீங்கள் செய்துவிட்டீர்கள் என்று கூறினாலும், இது கவினுக்கு நேர்ந்த ஒரு அவமானம் தான்.

எல்லாமே நெகட்டிவ்

எல்லாமே நெகட்டிவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினுக்கு கெட்டப் பெயர், காதல் தோல்விகள், அவமானங்கள் என அடி மேல் அடி விழுந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய ஹீரோவாக வரலாம் என்ற கவினுக்கு இதுவரை நெகட்டிவாகதான் எல்லாம் நடந்திருக்கிறது. அவர் வெளியே வந்த பிறகுதான் தெரியும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X