லாஸ்லியா ஜெயிலுக்கு போறேன்னதும் காதலிக்கே ஆப்பு வைத்த கவின்.. என்னதான்யா உங்க உறவு?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் என்ன உறவு என்றே தெரியவில்லை.
பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் இந்த வாரம் முழுக்க ரூல்ஸை சரியாக பின்பற்றாதவர்கள், டாஸ்க்கை சரியாக செய்யாதவர்களின் பெயரை கூறுமாறு உத்தரவிட்டார் பிக்பாஸ்.
இதைத்தொடர்ந்து தானாக ஆஜரான லாஸ்லியா நான் தான் அதிகம் ரூல்ஸை பிரேக் செய்தேன் ஆகையால் நான் ஜெயிலுக்கு போகிறேன் என புறப்பட்டார். லாஸ்லியா ஜெயிலுக்கு போகிறேன் என்றதும் கவினின் முகம் மாறிவிட்டது.

காதலிக்கு ஆப்பு வைத்த கவின்
கவின் லாஸ்லியா ஜெயிலுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடனே சரியாக பர்ஃபார்ம் பண்ணவில்லை என தனது காதலியான சாக்ஷியின் பெயரை சொன்னார். கூடவே மீராவுடன் சேர்ந்து கொண்டு சாக்ஷி, ஷெரினுக்கு எதிராக பேசினார்.

புரணி பேசும் கவின்
மேலும் சேரனை வச்சேன் தீர்த்தேன் என பேசி வருகிறார் கவின். சேரன் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று கூறியதை மனதில் வைத்துக்கொண்டு அவர்தான் ரூல்ஸை பிரேக் செய்தார் என மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் புரணி பேசினார்

காதலியை பலிகொடுக்க தயாரான கவின்
லாஸ்லியா ஜெயிலுக்கு போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த கவின், அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க தயாராக இருந்தார். சாக்ஷி, அபிராமி, ஷெரின், சேரன் என பலரை பலி கடவாக்கப் பார்த்தார் கவின்.

சேரன்தான் ஜெயிலுக்கு போயிருக்கனும்
லாஸ்லியா ஜெயிலுக்கு போன பிறகும் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரேஷ்மாவிடம், சேரனைதான் நீ ஜெயிலுக்குள் அனுப்பியிருக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தார்.

கவினுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை
மீண்டும் லாஸ்லியா கவினுடன் நெருக்கமாகதான் பழகி வருகிறார். உன்னை சைட் அடிக்கிறேன் என வெளிப்படையாகவே சொல்கிறார் லாஸ்லியா. கவின் மனசு அவரது கன்ட்ரோலில் இல்லை, சாக்ஷியை காதலித்து கொண்டிருக்கும் போதே லாஸ்லியாவுக்கும் ரூட்டு விட்டார்.

என்னதான்யா இருக்கு?
இதனை புரிந்து கொண்ட லாஸ்லியா கவினை திட்டி தீர்த்தார். ஆனாலும் மீண்டும் கவினுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இவருக்கு ஒன்று என்றால் லாஸ்லியா பதறுகிறார், லாஸ்லியாவுக்கு ஒன்று என்றால் கவின் துடிக்கிறார். என்னதான்யா இருக்கு உங்களுக்குள்ள?!


Click it and Unblock the Notifications











