என் செருப்ப திருடிட்டாங்க.. உன்ன சந்தேகப்படல! பளார் விட்ட நண்பருக்கு கவின் போட்ட 'அந்த' மெஸேஜ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை அவரது நண்பர் அறைந்த நிலையில் இருவரின் போட்டோவும், அவர்கள் பகிர்ந்து கொண்ட மெஸேஜ்களும் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை அவரது நண்பர் பிரதீப் ஆன்டனி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சந்தித்தார். அப்போது நீ இவ்வளவு கேவலமா கேம் விளையாடியதற்கும், உன்ன நம்பினவங்கள ஏமாத்தினதுக்கும், உள்ள இருக்குறவங்கள காயப்படுத்தினதுக்கும் இப்போ நான் ஒன்னு செய்யப்போறேன்.
நீ ஜெய்ச்சு டைட்டில் வின் பண்ணா அந்த ஸ்டேஜ்ல என்னை அடித்துக்கொள் என்றுக்கூறி பளார் என்று ஓங்கி ஒன்று கன்னத்தில் விட்டார். இதனை பார்த்த ஹவுஸ்மேட்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அனுதாப ஓட்டு
இதைத்தொடர்ந்து இதுவும் கவினை காப்பாற்ற விஜய் டிவி ஏற்பாடு செய்த டிராமாதான் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். கவின் அனுதாப ஓட்டுக்களை பெற இந்த டிராமா அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
நட்பின் இலக்கணம்
இந்நிலையில் கவினும் அவரது நண்பர் பிரதீப் ஆன்டனியும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூடவே கவின் தனது நண்பர் பிரதீப் ஆன்டனிக்கு எழுதிய ஒரு மெஸேஜும் நட்பின் இலக்கணம் என தீயாய் பரவி வருகிறது.

நீ தான் மைன்டுக்கு வந்த
அதில் கவின், டூ பிரதீப் ஆண்டனி என தொடங்கியுள்ளார். அந்த மெஸேஜில், யாரோ நல்லவங்க வீடு தேடி வந்து என் ரெண்டு செருப்பையும் திருடிட்டு போய்ட்டாங்க.. நீ தான் மைன்டுக்கு வந்த..!

புது செருப்பு வாங்கி தா
பேனிக் ஆவாத.. உன்ன சந்தேகப்படல.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுக்க வந்தேன்.. ஒன்னு எனக்கு புது செருப்ப வாங்கி தா.. இல்ல உனக்கு கொடுத்த என் செருப்ப திருப்பித்தா.. என பதிவிட்டிருக்கிறார் கவின்..! இந்த மெஸேஜ் 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications