சேரன் யார் நம் விஷயத்தில் தலையிட? லாஸ்லியாவை இன்டைரக்ட்டாக ட்யூன் செய்த கவின்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kaving angry over cheran

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சேரனுக்கு எதிராக லாஸ்லியாவை ட்யூன் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலிக்கின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது இரட்டை அர்த்தங்களில் அவர்கள் பேசி வருகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை கழட்டி வைத்து விட்டு பேசும் அளவுக்கு அவர்கள் சென்றுவிட்டனர். இதனை எச்சரித்த கமல்ஹாசன், அப்படிப்பட்ட விஷயங்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு போய் பேசிக்கொள்ளுங்கள் என நாசுக்காக கூறினார்.

கவின் தொந்தரவு

கவின் தொந்தரவு

பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரனும், வெளியே போய் இதைப்பத்தி பேசிக்கொள்ளலாம், வீட்டில் இருக்கும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார். ஆனால் கவின் தொடர்ந்து லாஸ்லியாவை தன் மீதான காதலை உறுதி படுத்துமாறு கூறி தொந்தரவு கொடுத்து வருகிறார்.

ஸ்டாப் பண்ணுவீங்களா?

ஸ்டாப் பண்ணுவீங்களா?

நேற்று முன்தினம் எபிசோடில் கவின், லாஸ்லியாவுக்கு அழுத்தம் கொடுத்தது ஒளிப்பரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சீக்ரெட் ரூமில் இருந்த சேரன், இது நியாயமா கவின், இதை ஸ்டாப் பண்ணுவீங்களா என கேட்டு கடிதம் எழுதினார்.

உங்க வேலைய பாருங்க

உங்க வேலைய பாருங்க

அதற்கு பதிலளித்த கவின், நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்ற ரீதியில் பதில் சொன்னார். இதைத்தொடர்ந்து சாண்டியிடம் பேசிய கவின், நேற்று பேசிய விஷயம் எப்படி வெளியே கன்வேயானது என்று தெரியவில்லை என புலம்பினார்.

லாஸை ட்யூன் செய்த கவின்

லாஸை ட்யூன் செய்த கவின்

இதைத்தொடர்ந்த தனியாக அமர்ந்திருந்த லாஸ்லியாவிடம் சென்ற கவின் அவரை சேரனுக்கு எதிராக அழகாக ட்யூன் செய்தார். அதாவது, உனக்கு பிடிச்சத நீ செய்யப்போற, எனக்கு பிடிச்சது நான் செய்யப்போறேன். உனக்கு பிடிக்காட்டி நீ செய்ய போறதில்லை.

மண்ணை அள்ளி போட்டுவிட்டார்

மண்ணை அள்ளி போட்டுவிட்டார்

காலையில் இருந்து கொஞ்சி பாட்டுப்பாடி ஜாலியாக இருந்தேன். இப்படி ஒரு லெட்டரை எழுதி அதில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார். நாம் உறவு குறித்து முக்கிய முடிவுக்காக பேசப்போகிறவர்கள் உன் ஃபேமிலி, உன் பிரன்ட்ஸ், என் சைடில் என் ஃபேமிலி, என் பிரன்ட்ஸ் என்று கூறுகிறார்.

சேரன் ஏன் தலையிடுகிறார்?

சேரன் ஏன் தலையிடுகிறார்?

இன்டைரக்ட்டாக சேரன் யார் நம் விஷயத்தில் தலையிட என லாஸ்லியாவிடம் கேட்கிறார் கவின். மேலும் சேரன் குறித்து வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல மெதுவாக நஞ்சை ஏற்றுகிறார் கவின். நயமாக லாஸ்லியவை பேசி குழப்புகிறார் கவின்.

சேரன் குற்றச்சாட்டு

சேரன் குற்றச்சாட்டு

இதனை சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்த சேரன், அந்தபுள்ளய பைத்தியமாக்கிவிடுவான் என்று கூறுகிறார். திரும்ப திரும்ப அதையே பேசி லாஸ்லியாவை கவின் குழப்புவதாகவும் குற்றம் சாட்டுகிறார் சேரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X