ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய.. மதுவின் இறை நம்பிக்கையை தொடர்ந்து இழிவுபடுத்தும் கவின்!
Recommended Video
சென்னை: மதுமிதாவை எப்போதும் அவருக்கு பின்னால் ஓம் நமச்சிவாய எனக்கூறி கிண்டலடிப்பதை கவின் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் மதுமிதா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கு காரணம் வனிதாதான். சிறிய பிரச்சனையை பெரிய களேபரமாக்கி வீட்டின் உறுப்பினர்களை அப்படியே மதுமிதாவுக்கு எதிராக திருப்பிவிட்டார்.
வனிதா, ஷெரின், ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி, கவின், மோகன் வைத்யா, முகென் ஆகியோர் ஓர் அணியாக உள்ளனர். எல்லா பெண்களிடமும் வலிய சென்று வழியும் கவின், மதுமிதாவை கண்டாலே எரிச்சலடைகிறார்.

படுகேவலமாக நடந்துகொள்கிறார்
கவின் பெண்களிடம் வழிவதும், காதல் என ரூட் போடுவதும், பெண்களை கண்ட இடங்களில் தொடுவதும் என படு கேவலமாக நடந்து வருகிறார். இதனால் கவினை கண்டாலே மக்கள் வெறுப்பாகின்றனர்.

ஓம் நமச்சிவாய
மதுமிதாவை எப்போதும் ஓம் நமச்சிவாய என அவருக்கு பின்னால் கிண்டலடித்து வருகிறார் கவின். பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியிலேயே சாமி கும்பிடுவது தனக்கு பிடிக்கும் அதுதான் தனது முதல் வேலை என கூறினார் மதுமிதா.

கவின் கிண்டல்
பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் சாமி படங்களை வைத்து காலையில் குளித்தவுடன் கும்பிட்டு வருகிறார். இதனை வைத்து கவின் மதுமிதாவுக்கு பின்னாடி ஓம் நமச்சிவாய என கிண்டலடித்து வருகிறார்.

நாமினேஷனின் போதும்கூட
நாமினேஷன் புராசஸின் போதும் கூட மதுமிதா கன்ஃபெஷன் ரூமுக்குள் செல்லும்போது ஓம் நமச்சிவாய எனக் கூறி கிண்டலடித்தார். அவர் கிண்டலடித்த போது வனிதா கேங்க் அவ்வளவு சத்தமாக சிரித்தனர்.

என்ன பேசுகிறார்கள் கேளுங்கள்
நேற்றைய எபிசோடில் எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என வேவு பார்க்குமாறு தனது அடிமைகளுக்கு ஆணையிடுகிறார் வனிதா. உடனே கவின், ஒன்னு எல்லாத்தையும் பண்ணிட்டு ஓம் நமச்சிவாய என சொல்லிக் கொண்டு இருக்கும் என மதுமிதா இன்டேர்க்ட்டா சொல்கிறார்.

இழிவுபடுத்துகிறார் கவின்
என்னதான் சண்டையாக இருந்தாலும் ஒருவரின் இறை நம்பிக்கையை இழிவுப்படுத்துவதும், கிண்டலடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அநாகரிகமாக நடந்துகொண்டு பெயரைக் கெடுத்துக்கொண்டார் கவின். என்னவோ கவினுக்கு நேரம் சரியில்லை.. கூடா நட்பு கேடாய் முடிய போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











