கழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin

Recommended Video

Bigg Boss 3 Tamil:Kavliya Haters| திட்டி தீர்க்கும் மக்கள்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் ரசிகர்கள் வீ அட்மையர் கவின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கியுள்ளனர்.

விஜய் டிவியின் புரடெக்ட்டான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே பெண்களுடன் கடலை போட தொடங்கிவிட்டார் கவின்.

பின்னர் சாக்ஷியை காதலிக்க தொடங்கிய கவின், லாஸ்லியா தானாக வந்து வலையில் சிக்கியதால் சாக்ஷியை கழட்டிவிட்டு அவரை காதலிக்க தொடங்கினார். தற்போது கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர்.

அதிகரிக்கும் நெருக்கம்

அதிகரிக்கும் நெருக்கம்

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் லாஸ்லியா கவினுடனான நெருக்கத்தை குறைக்கவில்லை. நாளுக்கு நாள் அவர்களின் நெருக்கம் அதிகரித்து வருகிறது.

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

கவின் ஏற்கனவே நான்கு பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்பதால் நான்கு பேரிடமும் கடலை போட்டதாக கூறினார். அவரது இந்த யுத்தி பெரும் சர்ச்சையானது.

காப்பாற்றும் விஜய்டிவி

காப்பாற்றும் விஜய்டிவி

தனது சுயநலத்துக்காக பெண்களை பயன்படுத்திக்கொண்ட கவினை வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய் டிவி அவரை வாரா வாரம் காப்பாற்றி வருகிறது.

பணம் கொடுத்து ஓட்டு

பணம் கொடுத்து ஓட்டு

காரணம் அவர் அதிக ஓட்டுக்களை பெறுவதுதான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கவினுக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் அனைத்தும் அவரும் அவரது நண்பர்களும் பணம் கொடுத்து ஏற்பாடு செய்தது என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டும் உள்ளது.

ட்ரென்ட்டிங்கில் டாப்

இதனிடையே கவினின் ரசிகர்கள் அவரை ட்ரென்ட்டாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று வீ அட்மையர் கவின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கியுள்ளனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

சென்னையில் 1

தேசிய அளவில் ட்ரென்ட்டிங்கில் 2வதாகவும் சென்னையளவில் முதலாவதாகவும் இருக்கிறது வீ அட்மையர் கவின் ஹேஷ்டேக் என்கிறார் இந்த நெட்டிசன்.

கழுவி ஊற்றிய கமல்

கழுவி ஊற்றிய கமல்

நேற்றைய எபிசோடில் கவினை கமல்ஹாசன் கழுவி ஊற்றினார். டாஸ்க்கை டாஸ்க்காக பார்த்தீர்களா? லாஸ்லியா விழுந்த போது இருந்த எமோஷன் ஏன் தர்ஷன் விழுந்த போது இல்லை என கேட்டு வறுத்தெடுத்தார்.

பேய்டு ரசிகர்கள்

பேய்டு ரசிகர்கள்

மக்களும் கவின் மீது கடுப்பில்தான் உள்ளனர். அப்படி இருக்கையில் கவின் டிவிட்டரில் ட்ரென்ட்டவாது பேய்டு ரசிகர்களால்தான் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X