பிக்பாஸ் ஃபைனல் கொண்டாட்டத்தில் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்! அடங்காத ஆர்மி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் டிவிட்டர் சமூக வலைதளத்தில் ட்ரென்ட்டிங்கில் உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிகம் பெயரை கெடுத்துக்கொண்டவர் கவின். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது முதலே காதல் கடலை என கொண்டாடினார் மனிதர்.
சேரனிடம் அவர் நடந்து கொண்ட விதமும், மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை கிண்டல் செய்ததும் பட்டப் பெயர் வைத்ததும் மக்கள் மத்தியில் அவர் மீது வெறுப்பை உருவாக்கியது.

குறைந்த நம்பிக்கை
மக்களின் கோபத்திற்கு ஆளானபோதும் வாரா வாரம் ஏதோ ஒரு காரணத்திற்காக காப்பாற்றப்பட்டார் கவின். இதனால் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான நம்பிக்கை குறைந்தது.

கவின் ஏற்பாடு
கவின் பணம் கொடுத்து ஓட்டுப்போட ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்பட்டது. இதனால்தான் மக்களின் ஆதரவு இல்லாத போதும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பை பெற்றார் என்றும் பேசப்பட்டது.

அதிகம் பேசப்பட்ட நபர்
அதேநேரத்தில் கவின் அடிக்கடி டிவிட்டரிலும் ட்ரென்ட்டாகி வந்தார். இந்த பிக்பாஸ் சீசனில் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட நபர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் கவின்.
ட்ரென்டிங்கில் டாப்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று கவின் மீண்டும் ட்ரென்ட்டிங்கில் உள்ளார். அதன்படி #BB3RealTangibleManKavin என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.


Click it and Unblock the Notifications











