உனக்கு என்ன பிராப்ளம் லைஃப்ல.. இது அது இல்லீங்க... வேற ஆள்.. வேற டோன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் கவின் - லாஸ்லியாவின் காதல் ரசமே சொட்டுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, சக போட்டியாளரான கவினை காதலிக்கிறார்.

இதனை நேற்று சேரனிடம் கூறினார் லாஸ்லியா. கவினை முன்பு பிடித்தது இப்போது ரொம்ப பிடிக்கிறது என்றார். மேலும் தங்களின் உறவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போவது வெளியே போய்தான் என்றும் கூறினார் லாஸ்லியா.

ஸ்டான்ட் பண்றான்

ஸ்டான்ட் பண்றான்

கவினும் தன்னை உண்மையாக பிடித்திருப்பதாக கூறினார். இதனால் கவின் லாஸ்லியா இடையிலான காதல் உறுதியானது. பேசும் அனைவரிடமும் கவின் தனக்காக ஸ்டான்ட் பண்றான் என்றே கூறி வருகிறார்.

கவின் - லாஸ்லியா காதல்

கவின் - லாஸ்லியா காதல்

முதலில் கவின் - சாக்ஷி காதலை வைத்து ஓட்டிய பிக்பாஸ் தற்போது கவின் - லாஸ்லியா காதலை வைத்து ஓட்டி வருகிறார். இதனால் சாக்ஷி வெளியே போனதில் இருந்து கவினையும் லாஸ்லியாவையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் பிக்பாஸ்.

கட்டம் கட்டி

கட்டம் கட்டி

அதிலும் கடந்த ஒரு வாரமாக கவினும் லாஸ்லியாவும் இல்லாமல் ஒரு புரமோ கூட போடுவதில்லை. அவர்களை மட்டுமே வைத்து புரமோ போட்டு வருகிறார் பிக்பாஸ். இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் கவின் - லாஸ்லியா காதலை கட்டம் கட்டி காட்டியுள்ளனர்.

லைப்ல என்ன பிராப்ளம்

லைப்ல என்ன பிராப்ளம்

கார்டன் ஏரியாவில் வழக்கமான இடத்தில் தனிமையில் அமர்ந்து பேசுகின்றனர் கவினும் லாஸ்லியாவும். அப்போது உனக்கு லைப்ல என்ன பிராப்ளம் என்று கேட்கிறார் லாஸ்லியா. பின்னர் நான்தான் பிராப்ளம் என்று கூறிவிட்டு தரையில் கிறுக்குகிறார்.

உனக்கு ஒன்னும் தெரியாது

உனக்கு ஒன்னும் தெரியாது

அப்படியா என்று கேட்கும் கவின் எனக்கு தெரியும் என்கிறார். உடனே லாஸ்லியா உனக்கு என்ன தெரியும்? உனக்கு ஒன்னும் தெரியாது என்று கூறி வெட்கப்படுகிறார்.

வெறுப்பேற்றிய பார்வையாளர்கள்

வெறுப்பேற்றிய பார்வையாளர்கள்

கடந்த வாரம் கமலுடனான சந்திப்பின் போது வனிதா அவருடன் பேச முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் வனிதா பேச முற்பட்டபோதெல்லாம் அங்கிருந்த பார்வையாளர்கள் ஓவென கத்தியும் கூச்சலிட்டும் அவரை பேசவிடாமல் வெறுப்பேற்றினர்.

டென்ஷன் ஆன வனிதா

டென்ஷன் ஆன வனிதா

இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் அவங்களுக்கு என்ன பிராப்ளம் சார் லைஃப்ல இரண்டு முறை அதையே கோபமாக திருப்பி திருப்பிக் கேட்டு டென்ஷன் ஆனார்.

வேற டோன்

வேற டோன்

இதையேதான் இன்று லாஸ்லியாவும் கேட்டுள்ளார். ஆனால் கவினிடம் மட்டும் கேட்டுள்ளார் காதல் மொழியில். எந்த கோபமும் இன்றி காதல் டோனில் கேட்டிருக்கிறார். டயலாக் ஒன்றாக இருந்தாலும் கேட்ட ஆளும் கேட்ட டோனும் கேட்ட விதமும் வேறு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X