என்னடா காதல் இது.. காதலியேவே நாமினேட் செய்த கவின்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், தான் காதலிக்கும் பெண்ணையே நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அந்த வகையில் முதல் வாரம் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இரண்டு பேர்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும்.

சேரன் நாமினேஷன்
அதன்படி போட்டியாளர்கள் 2பேரை நாமினேட் செய்தனர். பிக்பாஸ் வீட்டின் விஷ பாட்டிலான சாக்ஷி, அபிராமியையும் மீராவையும் நாமினேட் செய்தார். இயக்குநர் சேரன் சாக்ஷி பெயரையும் கவின் பெயரையும் நாமினேட் செய்தார்.

சேரன் பெயரை சொன்ன ரேஷ்மா
மதுமிதாவும் கவின் பெயரையும் சாக்ஷி பெயரையும் நாமினேட் செய்தனர். ரேஷ்மா யாரும் எதிர்பாராத வகையில் சேரனுடன் ஒட்டி உறவாடிக்கொண்டே அவரது பெயரை நாமினேட் செய்தார்.

சேரன் செய்ததில்லை
சரவணனுக்கு என்ன பிரச்சனையோ தெரியவில்லை வந்த நாள் முதல் சேரனை வைத்தேன் தீர்த்தேன் என்ற முடிவில் உள்ளார். வழக்கம்போல இந்த வாரமும் அவர் சேரனைதான் நாமினேட் செய்துள்ளார். ஆனால் சேரன் ஒருமுறை கூட சரவணன் பெயரை இதுவரை நாமினேட் செய்ததில்லை.

காதலிய நாமினேட் செய்த கவின்
அதெல்லாம் இருக்கட்டும் கவின் யாரை நாமினேட் செய்துள்ளார் என்று பாருங்கள். கவின், தான் உருகி உருகி காதலித்த சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்துள்ளார். நேற்று முன்தினம் போட்ட குறும்படத்திற்கு பிறகு கவினிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னாடியே போய்
இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னடா காதல் இது.. முன்னாடி வழிஞ்சு ஒழுகுறீங்க, பின்னாடியே போய் நாமினேட் பண்ணிட்டு வர்றீங்க என்று கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











