ஏன் கவின் இப்படி செஞ்சாரு.. கமல் சொல்றத பார்த்தா கூப்ட்டு விசாரிப்பாரு போல!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 97 : கவினிடம் காரணம் கேட்ட கமல்-வீடியோ

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் முதல் புரமோ வெளியாகியுள்ளது.

கடந்த 2 சீசன்களை போலவே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பின் போது வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விவாதிப்பார் கமல். அந்த வகையில் இன்று அகம் டிவி வழியே நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கவுள்ளார்.

ரூ.5 லட்சம் பணத்துடன்

ரூ.5 லட்சம் பணத்துடன்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி நடந்தது, கவின் வெளியேறியதுதான்.கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

குழம்பும் ரசிகர்கள்

குழம்பும் ரசிகர்கள்

ஹவுஸ்மேட்ஸ்கள் எடுத்துக்கூறியும் அதனை காதில் வாங்காத கவின், இந்த வாய்ப்பு தனக்கு மீண்டும் கிடைக்காது என்று கூறி, காதலித்த லாஸ்லியாவையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.கவின், இப்படி திடீரென சென்றதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் மண்டையை குழப்பி வருகின்றனர்.

கோட் சூட்டில் அசத்தல்

கோட் சூட்டில் அசத்தல்

நிச்சயம் கமல், கவினை சந்தித்து இதுகுறித்து விசாரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கோட் சூட் என படு அசத்தலாக வந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

என்ன இப்படி பண்ணிட்டாரு?

என்ன இப்படி பண்ணிட்டாரு?

அப்போது பேசும் கமல், ஏன் கவின் இப்படி செஞ்சாரு, என்ன இப்படி பண்ணிட்டாரு? இந்த மாதிரி கேள்விகளுக்கு கவின்தான் பதில் சொல்ல வேண்டும். இன்று இரவு 9.30 மணிக்கு என கூறுகிறார் கமல்.

கவினின் திட்டம்?

கவினின் திட்டம்?

இந்த புரமோவை பார்க்கும் போது கவின், இன்றைய நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கவின் போட்ட திட்டம் என்ன என்பது குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறதது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X