எல்லாம் நடிப்பா சாண்டி? லாஸ்லியாவ கழட்டிவிட கவின் போட்ட பிளான்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினையும் லாஸ்லியாவையும் சாண்டி நாமினேட் செய்தது, லாஸ்லியாவை கழட்டிவிட அவர்கள் போட்ட திட்டம் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓபன் நாமினேஷனின் போது சாண்டி, கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார். மேலும் கவின் பழைய கவினாக தனக்கு வேண்டும் என்று கூறி அழுகிறார்.
கவினும் இதனைக் கேட்டு அழுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சாண்டி நடிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். லாஸ்லியாவை கழட்டிவிட கவினும் சாண்டியும் போட்ட திட்டம் என்றும் கூறி வருகின்றனர்.

அழுது புலம்பும் லாஸ்
கவின் விலகினாலும் லாஸ்லியா நெருங்கி நெருங்கி செல்கிறார். கவின் பேச வேண்டாம் என்று கூறினால் அழுது ஆர்ப்பரிக்கிறார். இதனால் லாஸ்லியாவை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் உள்ளார் கவின்.

கழட்டிவிட முடிவு
பலரும் காதல் வேண்டாம் என கவினுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். ஃபுரூட்டி காலர்களும் கவினின் காதலை மையப்படுத்தியே பேசி வருகின்றனர். இந்நிலையில் நாமினேஷனை காரணமாக வைத்து லாஸ்லியாவை கழட்டிவிட கவினும் சாண்டியும் முடிவு செய்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சேரன் செய்தால் டிராமா
மேலும் சேரன் அழும்போதெல்லாம் கவின் அதனை டிராமா என்றே பின்னால் கூறி வந்தார். இந்நிலையில் இன்று கவின் அழுவது மட்டும் என்ன உணர்வா? என்று திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
உணர்வின் வெளிப்பாடா?
சேரன் அழுதா நடிப்பு! கவின் அழுதா உணர்வின் வெளிப்பாடா! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
முடிஞ்சுடும்
இப்ப ஃபேக்லியா உடனே சாண்டிய நாமினேட் பண்ணுவா.. இந்த காதல் பண்ணுறதுக்கா இந்த வெங்காயம் இலங்கைலருந்து வந்துச்சு.. காதல்லாம் வந்துட்டா கேரியர் ஆரம்பிக்குறதுக்குள்ள முடிஞ்சுடும் முட்டாளே.. என்கிறார் இந்த நெட்டிசன்.
ஒதுக்கி தள்ளிட்டாங்க
கவினும், லாஸ்லியாவும் சேர்ந்து சாண்டிய ஒதுக்கி தள்ளிட்டாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
திடீருன்னு அக்கறை
சாண்டி அவ்வளோ அக்கறை கவின் மேல இருந்தா முதல்ல இருந்தே கண்டிச்சிருக்கலாமே "புள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுற" கதையா இல்ல இருக்கு என்ன திடீருன்னு அக்கறை என்று விளாசுகிறார் இவர்.
லாஸை கழட்டிவிட திட்டம்
சாண்டியின் இந்த பேச்சு கவினின் திட்டம்! பழைய கவினா வேணும்னா லாசுவை கழட்டிவிடனும்! அதானே! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
கவின சேவ் பண்ண
சாண்டி நடிக்கிறான் கவின சேவ் பண்ண ட்ரை பண்றான்
கமல் சார் இது பிக்பாஸ் வீடா இல்லன்னா பாண்டி மடமா என்று கேட்கிறார் இவர்.
சாண்டி ஓவர் ஆக்டிங்
சாண்டி ஓவர் ஆக்டிங்.. யாராச்சும் செத்தா போயிட்டாங்க.. விளையாட்டு தானடா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











