கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ?!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து லாஸ்லியாவையும் சேரனையும் ஒன்றாக வெளியே வருமாறு அழைத்தபோது கவின் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியாவையும் சேரனையும் ஒன்றாக பிக்பாஸ் சொல்லும் ரூமுக்குள் வருமாறு அழைக்கிறார் கமல்.
இதனை தொடர்ந்து சக போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசிவிட்டு, அவர்களை ஆரத்தழுவி விடைபெறுகிறார் சேரன். லாஸ்லியா பெட்ரூமில் தனது துணிமணிகளை எடுத்து வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.

சலனமே இல்லை
இந்நிலையில் கமல், லாஸ்லியாவையும் சேரனையும் பிரியாவிடை பெற்று வருமாறு அழைக்கும் போது கவின், சோஃபாவில் அமர்ந்து கீழே குனிந்தபடி சிரித்துக்கொண்டிருக்கிறார். தனது காதலியான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என்ற எந்த சலனமும் அவரது முகத்தில் தெரியவில்லை.

தயக்கமே இல்லை
பெட்ரூமில் சென்று பேசும்போதும் கூட இப்போதாவது நான் சொல்வதை கேள் என கேஷ்வலாக சொல்கிறார். கவினின் முகத்தில் எந்த தயக்கமும் தெரியவில்லை.

மீண்டும் வாய்ப்பில்லை
ஏற்கனவே சேரன் சீக்ரெட் ரூமிற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அதனால் சேரனை மீண்டும் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பும் வாய்ப்பில்லை

எந்த கவலையும் இல்லை
இப்போது கமல் லாஸ்லியாவையும் சேரனுடன் சேர்த்து அழைத்திருப்பதால் அவர் நிச்சயம் சீக்ரெட் ரூமுக்குதான் அனுப்பப்படுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரா கவின் என தெரியவில்லை. ஆனால் அவர் முகத்தில் லாஸ்லியா வெளியேறுவதால் எந்த கவலையும் இல்லை.

முன்பே தெரிந்துவிட்டதோ
இதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் ரியாக்ஷனே சரியில்லையே. சேரன் தான் இந்த வாரம் வெளியே போகப்போகிறார் என்று கவினுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதா என் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











